பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த்திருத்தலப் பயணம் 爱蔷?

என்று கூறுவார். வயலிலுள்ள நண்டுகள் உணவிற் காகத் தாமரைப்பூவில் சென்று புகுவது உண்டு; அங்ஙனம் போயிருக்கும்போது பாக்குப் பாளைகளினின்றும் உதிரும் வேண்முத்துகள் இறைக்கப்பட்டு நண்டின் வளை மூடப் பெறுகின்றது என்று கூறுகிறார் ஆழ்வார். திருநாங்கூர் வயல்களில் நெற்பயிர்கள் செழித்து வளர்கின்றன; அந்த நெற்பயிர்களின்மேல் கருநெய்தற்பூக்கள் வரிசை வரிசை யாய்ப் படர்ந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வண்டுகளின் ஆரவாரமும், பூக்கொய்தற்பொருட்டுச் செல்லும் மங்கையரின் பாதச் சிலம்புகளின் ஒலியும் சேர்ந்து தொனிக்கின்றன (2). திருநாங்கூரைச் சுற்றிலும் தென்னை மரங்களும் மாமரங்களும் செறிந்து கிடக் கின்றன; ஓங்கியிருக்கும் தென்னை மரங்களினின்று தேங்காய் நெற்றுகள் மாமரங்களின்மீது வீழ்கின்றன; அந்த அதிர்ச்சியினால் மாம்பழங்கள் உதிர்ந்து வீழ் கின்றன; அவற்றையெல்லாம் திரட்டி உருட்டிக் கொண்டும், மற்றும் பலவகையான மலர்களை அடித்துக் கொண்டும் பெருவெள்ளமாகப் பாய்ந்துவிடும் காவிரி யாற்றுக் கால்வாய்களையுடையது திருநாங்கூர் (3). அழகு பொருந்திய மலர்கள் மலிந்துள்ள சோலைகள் விண்ணை முட்டுமளவும் பரவியுள்ளது; அவை எழில் மதியை அசைய வொட்டாமல் தடுத்து நிறுத்துகின்றன (4). நறுமணம் கமழ்கின்ற மலர்களையணிந்த கூத்தலை யுடைய மகளிர்நீரிஒ படிந்து நீராடுகையில் தங்கள் கொங்கைத் தடங்களில் அணிந்திருந்த குங்குமக் குழம்பு களைத் தேய்த்துக் கழுவுவதனால் நீரோட்டம் செந்நிறம் அடைந்து வெண்மண்ல் நிலங்களில் தவழ்கின்றது (7). திருமணிக் கூடத்துத் திரு மொழியிலும்,

கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் தழுவிப் போந்த தெய்வ நீர் கமழும் நாங்கூர் (4.5:2)

(கொவ்வை - கொவ்வைக் கனி போன்ற)