பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廖肇噶 பரகாலன் பைந்தமிழ்

அறையும்-ஒலிக்கின்ற; புனல்-நீர், ஒருபால்-ஒரு பக்கம்; பொழில்-சோலைகள், சிறை-சிறகுகள்; இனம்-திரள்கள்;

ஊரைச் சூழ்ந்த நீர்நிலைகளிலும் வயல்களிலும் பொழில்களிலும் வண்டுகள் இன்னொலிகளை எழுப்பிக் இதாண்டுள்ளன; கண்ணுக்கும் செவிக்கும் விருந்துாட்டும் சூழ்நிலையை யுடையது சிறு புலியூர்” என்கின்றார் ஆழ் வார். நீர் நிலைகளில் வண்டுகள் ஒலிக்குமோ? என்ற வினா எழுகின்றது. நீர் நிலைகளில் மதுவோடு கூடிய வெள்ளப் பெருக்கும் இருக்குமாதலால் மதுவின் நசையினால் வண்டு கள் வந்து மொய்க்கும்.

இன்னும் ஆழ்வார், எறிநீர்ச் செந்தாமரை மலரும் இது புலியூர் (5) என்று இவ்வூரைக் காட்டுவர். மேலும்,

முழுநீலமும் அலராம்பலும்

அரவிந்தமும் விரவிக்

கழுந்ரொடு மடவார் அவர் கண்வாய்முகம் மலரும்

செழுநீர்வயல் தழுவும்.சிறு

புலியூர் (6).

(முழுநீலம்-முற்றிலும் கறுத்துள்ள நீலோற்பலம்: அரவிந்தம்-தாமரை கழுநீர்-செங்கழு நீர்ப் பூக்கன்; விரவி-சேர்ந்து, மடவார்-பெண்கள் 1.

என்று காட்டுவர். இங்கு, சிறு புலியூரில், ஊருக்கும் வய லுக்கும் வாசி (வேறுபாடு) தெரிந்து கொள்ள வொண் ணாதபடி இருக்கும் என்கின்றார். நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களாகத் தோற்றும்; அரக்காம் பல்கனை நோக்கினால் அப்பெண்களின் செவ்விதழ்களை நிகர்ப்பனவாக இருக்கும்; தாமரை மலர்களைக் காணின்,