பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 24%

தன்மையில் பாடியவை ஐந்து; பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயால் பேசியவை ஐந்து" இதனால் ஊரின் சூழ்நிலை, ஊரின் நிலை, கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் பெ ரு ைமிகள் இவற்றைப் பேச அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றார் ஆழ்வார். பெரும்பாலும் குற்றெழுத்துகளே நிரம்பப் பெற்றுச் சித்திரக்கவிகளாலும் ஒரு திருமொழியைப் (8. 7) பாடி மகிழ்கின்றார். இதன் ஒவ்வொரு பாசுரமும் 'கணபுரம் அடிகள் தம் இடமே என்ற தொடர்களால் இறுகின்றது.

தலச் சூழ்நிலை : தலச் சூழ்நிலையை ஆழ்வார் இவ்வாறு காட்டுவர்: கண்ணபுரம் குளங்கள் நிறைந்த ஊர் (8.7:1), களை பறிக்கின்றவர்கள் களைக்கொட்டு களைக் கொண்டு களை பறிக்குங்கால் சிறுதுறுைகளின்றும் புறப்படும் முயல்கள் அவர்கள் முகத்தில் துள்ளும்; செழிப்பான கழனிகளில் கயல் மீன்கள் துள்ளும் (3); சோலைகளெங்கும் நறுமணமுள்ள மலர்களைக் கோதி, மதுவைப் பருகி அக்களில்பால் இசை எழுப்பும் (4, 6); கழனிகளில் கலப்பைகளைச் செலுத்தும் போதும், காலால் குழப்பும் போதும் இடையிலே தப்பிக் கிடந்த தாமரை மலர்களினின்றும் நறுமணம் புறப்படும் (8).

மேலும், கண்ணபுரம் காடும் வயல்களும் சூழ்ந்திருக் கும் (8.8:1): வயல்களில் செழித்த நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்து இருள் மூடிக் கிடக்கும் (4); வயல்களில் பொன்

5. வேற்றுவாயால் பேசியவை ஐந்தனுள் தாய்ப் பாசுரமாகப் பேசியவை இர்ண்டு (8.1; 8.2) பதிகங்கள்; மகள் பாசுரமாக நடப்பவை மூன்று (8, 3, 8-4; 8_5) திருமொழிகள். இவற்றைப் பற்றிய செய்திகளை வேறிடங்களில் கண்டு மகிழ

லாம்.