பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii

தோழி, தாய், மகள் பாசுரங்கள், தூது விளக்கங்கள் இந்த நூலிலேயே மிகவும் சிறந்த பகுதியாகும். பரகாலர் தாய் நிலையில் பண்பட்ட தமிழ் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்பு வதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார். பரகாலர் தாய் நிலையிலிருந்து பாடும் திருப்பதிகள், திருவிடஎந்தை, திருவாலி, திருப்பார்த்தன்பள்ளி, திருவரங்கம், திருக் கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருநெடுந்தாண்டகம் இடைப் பத்து (11, 20) நற்றாயாகவும், செவிலித் தாயாகவும் பாவித்துப் பாடும் பாடல்களின் உருக்கம் தாயின் உள்ளன்பைக் காட்டுவனவாகும்.

திருமங்கையாழ்வார் பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்டு. அட்டபுயகரம், திருவாலி, திருக்கண்ணபுரம் திருப்புல்லாணி முதலிய திவ்விய தேசத் தெம்பெருமான் களைக் காதல் மீதுாரப் பாடுகின்றார் பரகால நாயகியின் உள்ளம் உணர்ந்த எம்பெருமான் அட்டபுயகரத்தில் ஸேவை ஸாதிக்க, இவ்வாழ்வார் நாயகி இவரை யார் என்று அறிந்து கொள்ள முடியாமல், யார் கொல் என்ன, அட்டயபுயகரத்தேன் என்றாரே' என்கிறார்.

இறைவனோடு கலந்து பிரிந்த பரகால நாயகி, பிரிவினால் துன்புற்று, தலைவன் மீண்டும் வாராமையி னால், அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாமையினால், தானே அவன் இருப்பிடம் நோக்கிச் செல்ல, மேனி தளர்ச்சியுற, கண்களில் கண்ட வண்டு, குருகு முதலிய பறவைகளைத் துTது சொல்லி தன் ஆற்றாமையை வெளியிடுகிறாள். திருக்கண்ணபுரத் திறைவனிடம் கருத்து வைத்த பரகால நாயகி, தன்னுடைய வளைகள் கழன்று விழுவதைக் கூறுகிறாள். திருப்புல்லாணிப் பதிகத்தில் "மனமே! நீ இங்கு வருந்துவதால் பயனில்லை. காதல்