பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 爱岳直

செய்கின்றார். கணபுரம் அடிகள் தம் இடமே' என்று ஒரு தடவைக்கு ஒன்பது த ட ைவ க் கு எம்பெரு மானின் இருப்பிடத்தையும் அநுபவித்து இனியராகின்றார். (8.7) எம்பெருமானை மீன், ஆமை, வரா கம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், தசரதராமன், பலராமன் கிருட்டிணன் என்று அவதார மூர்த்திகளைக் கண்டு அநுபவித்து அகமகிழ்கின்றார்: (8, 8). இக்கண்ணபுரத் தம்மானுக்கன்றி வேறொருவருக்கு உரியேன் ஆல்லேன்' என்று தம் அநந்ய்ார்ஹ சேஷத்துவத்தை, 'அம்மானை - அடியேன் அடைந்து உய்ந்து போனேனே' என்றும், 'கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு அடியேன் ஒருவ னுக்கு உரியேனோ?” (8. 9: 5) என்றும் வெளியிட்டு அகமகிழ்கின்றார். அடுத்த திருமொழியிலும் நின்னை யல்லால், வருதேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் நான் கருதேனே' (8. 10: 2) என்று தாம் மறந்தும் புறந்தொழா மாந்தன் என்பதை அரண் செய் கின்றார். இதற்கு முத்தாய்ப்பாக,

'மற்றும்ஒர் தெய்வம்

உளதென்று இருப்பாரோடு உற்றிலேன்; உற்றதும் உன்

அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின்

எட்டு எழுத்தும் கற்று தான்' (8. 10:3)

மற்றும் - உன்னைக் காட்டிலும்; உற்றிலேன் - இணங்கேன்!

என்று பேசுவர். பிற தெய்வங்களைத் தொழுவாரோடு இணங்கமாட்டேன்; உன் எட்டெழுத்து மந்திரம் அர்த்த பஞ்சகத்தைப் பேசினாலும், நான் கண்ட சிறப்புப் பொருள் பாகவத சேஷத்துவமேயாகும்’ என்று தம்