பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்

w தி திருத்த

2

5

5

மணிமுடி சிதறும்படிக் கொன்று குவித்து அவர்களுடைய குருதி வெள்ளத்தில் தீர்த்தமாடிக் கோபம் தணியப் பெற்ற பரசுராமனாகத் திருவவதரித்தவன் (6): தனது மிடுக் கினால் தேவர்களைத் துன்புறுத்திய இராவணனை முடித் துக் கட்டிய பெருமான் இவன் (7); கழுத்தில் ஒலைகட்டிப் பாண்டவர்க்காகத் துரது சென்றபோது, துரியோதன னைப் பொய்யான ஆசனத்தையிட்டுக் கொல்ல நினைத்த போது பெரிய திருமேனியையுடையவனாக வளர்ந்து அவன் திட்டத்தைக் குலைத்தருளிய பெம்மான் இவன் (8); பார்த்தனுக்குச் சாரதியாக நின்று மாபாரதம் முடித்தருளிய மாயனே இவன் (9). இத்தகைய எம்பெரு மானைச் சேவித்து மங்களாசாசனம் செய்தபிறகு திரு நாகை செல்லத் திருவுள்ளம் கொள்ளுகின்றார்.

21. திருநாகை: இத்திவ்விய தேசத்தை இந்த ஆழ்வார் மட்டிலும் ஒரு திருமொழியால் (9.2) மங்களா சாகனம்செய்துள்ளார்.திருக்கோயிலில் உட்புகுந்து செளந் தரிய ராஜனைச் சேவித்தார்; என்றைக்கும் எங்கும் கண்ட றியாத திருக்கோலமாயிருந்தது. அந்தப் பெருமானை இன் னான் என்று அறியக் கூடவில்லை; முகத்தை நேரே பார்த்து முன்னிலையாக்கிப் பேசமுடியாதபடி சோதி வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது. அச்சோதி வெள்ளத்தில் நெஞ்சைப் பறிகொடுத்துத் தம் ஆண் தன்மையை இழந்து பெண்மை நிலை எய்திப் பரகால நாயகியாகின்றார். இத்திருமொழி மகள் பாசுரமாக'

7. திருகாகை : நாகப்பட்டினம் இருப்பூர்தி நிலை யம். நிலையத்திலிருந்து சுமார் இரண்டு ஃபர் லாங் தொலைவிலுள்ளது திருக்கோவில். எம். பெருமான்: செளந்தரியராஜன். நிறை திருக் கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் . செளந்தரியவல்லி. பெரி. திரு. 9.2 (பதிகம்). மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ. நா.தி. (1) கட்டுரை-19 காண்க.