பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛荡轰 பரகாலன் பைந்தமிழ்

துை. இத்தகைய பெருமானை நான் எங்கும் கண்டதாக நினைவில்லை. இவருடைய வடிவழகு பேச்சுக்கு நில

மன்று காண்! இவர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்ந்திடுக' (5)

அதோழி, இவரைப் பார்த்தால் கம்சன் அரண்மனை வாயிலில் மதமூட்டி நிறுத்தி வைக்கப் பெற்ற வேழத்தின் மகுப் பொசித்துக் கொன்ற கோவலன் போன்றுள்ளார். அவர்தானோ இவர்? அணிகள் பூண்ட மங்கையர் தம் நெஞ்சைத் தஞ்சமாக வுடையவரோ இவர்? இன்னா ரென்று அறுதியிடக் கூட வில்லையே! தாமரை போன்ற திருக் கண்கள் இருக்கும் அழகை என்னென்று சொல் வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தினின்றும் தள்ளித் திருத்தாளால் உதைத்த தனி வீரராகவே தோன்று கின்றார். இராவணனைப் போன்ற வணங்காமுடிகளும் இவரைக் கண்டவாறே பரவசப்பட்டு வணங்கும்படி பன்றோ இவர்தம் அதிசயம் இருப்பது ஓர் அஞ்சனக் குன்றம்தான் இங்கனம் வடிவம் கொண்டு நிற்கின்றதோ? என்னலாம்படி இருக்கின்றார் காண்: வாய்கொண்டு சொல்லவொண்ணாத பேரழகு படைத்த இவர் திறத்தில் நான் என்னவென்று சொல்வேன்?' (8).

தோழி, தாமரை மொட்டை மலர்விக்கச் செய்ய வல்ல பேரருளாளரான ஆதித்தியனோ இவர்? இவரைப். பார்த்தவாறே என் பக்கல் நினைவின்றியே என் நெஞ்சு இவரை வணங்கி நிற்கின்றது. உன்னையறியாமல் எனக்கு. வரும் நன்மையொன்றுமில்லையே! அப்படியிருந்தும் உன்னையும் என்னையுமறியாமல் இப்படி ஒரு நன்மை புண்டானது என்னே! இவர் செய்கின்ற காதல் விளை யாட்டுகளோ நெடுநாளாக மிகப் பழகியவர் செய்பவை போல் உள்ளன. ஆயினும், இதற்கு முன்பு இவரைக் கண்டதாகவும் எனக்கு நினைவு இல்லை. உற்று நோக்கு