பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

கொண்ட வள்ளல் விளங்கும் புல்லானி சென்று சேர். "ஒரு நாளும் உன்னைப் பிரியமாட்டேன்’ என்றவர் 'இப்போது பிரிந்து சென்று விட்டார். அவர் இருப்பிடம் சென்று வணங்குவோம்' என்று கூறி புல்லாணி செல்ல புறப்படுகின்றாள். தான் படும் துன்பம் எல்லாம் கூறி புல்லாணியம்மானை அடையத் துடிக்கின்றாள் பரகால நாயகி.

தோழியோடு கொண்ட நாயகி அநுபவங்களை விளக்கும் பாசுரங்கள் இறைவனையும் கட்டுப்பண்ணி, நம்மையும் கரைந்துருக வைப்பவை. பக்தி இலக்கிய உலகில் ஒப்பற்ற இப் படைப்புகளின் சிறப்பினைப் பேராசிரியர் அவர்கள் நாடகமாகவே படம் பிடித்துக் காட்டுகின்றார். திருத்தண்காவையும், திருக்குடந்தையை யும், திருக்கோவலூரையும் வாயாரப் பாடின விடத்திலும் மனநிறைவு பெறாமையாலே பரகால நாயகி ஆடவும் தொடங்குகிறாள். இப்படி இவள் ஆடுகின்றபடியைக் கண்ட அன்னை, நங்காய்! நங்குடிக்கு இதுவோ நன்மை?' என்ன்கிறாள். அதாவது சேதந இலாபம் ஈசுவரனுக்கு புருஷார்த்தமேயன்றி, ஈசுவர இலாபம் சேதத னுக்குப் புருஷார்த்தமன்றே; அவனுடைய பேற்றுக்கு அவன் தானேயன்றோ பதற வேண்டும்? நீ இங்கணம் பதறலாமா?' என்ற பேராசிரியரின் விளக்கம் n ம்பிர தாயத்தின் தோய்ந்த பொருளை நயமாக எடுத்துறைத் துளைாாகள.

ஆழ்வாரின் இறையநுபவம் என்ற தலைப்பில் திருமங்கை ஆழ்வாரின் பகவதநுபவம் தாமாகவும், நாயகி பாவத்திலும் அமைந்தது என்று (பக் 439) கூறி, திருநாமங்களைச் சொல்லி அநுபவித்தல், பகவத் குணாதுபவம், வடிவழகை வருணித்துப் பேசுதல், திவ்விய தேச அநுபவம், மனத்தை ஆற்றுப் படுத்துதல் ஆகியவற்றைக் கூறி, ஆழ்வாரின் பரத்துவ, வியூக, விடல. அவதாரங்களில் அநுபவம், மற்றும் அன்னமாதி அருமறை