பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓశ్రీ{} பரகாலன் பைந்தமிழ்

பின் கணமங்கைக் கற்பகத்தைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார்.

22. திருக்கண்ணமங்கை: இங்கு எழுந்தருளியிருக் கும் எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் கனமங்கைக் கற்பகம்’ (பெரிய திருமடல்) என்று மங்களாசாசனம் செய்கின்றார். இப்பெருமானை மங்களாசாசனம் செய்

கப்பெற்ற ஒரு திருமொழியில் (7.10).

பெரும்பு நக்கட லை, அட லேற்றினைப்

பெண்ணை, யானைஎண் ணில்முனி வர்க்கருள் தருந்த வத்தை,முத் தின் திரள் கோவையைப்

பத்த ராவியை, நித்திலத் தொத்தினை அரும்பி னை அல ரை,அடி யேன்மனத்

தாசை யை,அமு தம்பொதி யின்சுவைக் கரும்பி னைகணி யைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே (1) (அடல் ஏறு-செருக்குடைய காளை; தவம்-தவப் பயன்; கோவை-மாலை, பத்தர் ஆவி-பக்தர் கட்கு உயிர் போன்றவன்).

8. திருக்கண்னமங்கை: திருவாரூருக்கு மேற்கே சும்ார் எட்டு கி. மீ. தொலைவிலுள்ளது. கும்ப கோணம் செல்லும் சாலையிலுள்ளது. திருவாரூ ரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதி உண்டு. எம்பெருமான்: பக்தவத்சலப் பெரு மாள் பத்தராவிப் பெருமாள் சற்றுப் பெரிய் மூர்த்தி; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்; நின்ற திருக்கோலம். தாயார்: அபிஷேக வல்லி. இவருக்கு இங்குத் தனிக்கோயில் உண்டு. திருமங் கையாழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது. பெரி திரு. 7, 6: 5; 7. 10 (பதிகம்); 10.1:1; 11.6:7; சிறி, திருமடல் (39) பெரி. திருமடல் (57) மேலும் விளக்கம் வேண்டு வோர் சோ. நா. திரு. (1)கட்டுரை, 20 காண்க.