பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 盛翁夏

என்பது முதற் பாசுரம். இதிலும் இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பது பாசுரங்களிலும் எம்பெருமான் தன் பெருமைகளையெல்லாம் காட்டிக் கொடுத்தமையைப் பரக்கப் பேசி இனியராகின்றார் ஆழ்வார்.

'பரந்த கடல்போலே அளவிடமுடியாத சொரூப: சுபாவங்களையுடையவன்; செருக்குடைய காளை போல் மேனாணிப்புள்ளவன்; பெண்ணைப்போல் பாரதந்திரமே வடிவானவன்; ஆணைப்போல் சுவாதந்திரியமாயிருப் பவன்; எண்ணிறந்த யோகியருக்கு அருள் பாலிக்கும் தவப் பயனாயுள்ளவன். முத்தின் திரளாகிய மாலை போன்ற வன்; பக்தர்கட்கு உயிர் நிலையாயிருப்பவன்; முத்துக் குவியல் போன்றிருப்பவன்; அரும்புபோல் இளமையுடை யவன்; மலர்ந்த பூப்போல் யெளவன பருவமுள்ளவன்; அடியேன் மனத்தில் புதிது புதிதாக எழும் ஆசைக்கு இலக்கணமானவன்; அமுதத்தை நீராகப் பாய்ச்சியதனால் வளர்ந்த இன்சுவையுள்ள கரும்புபோல் இனிமையுடை யவன்; கனிபோல்கண்ட போதே நுகரத்தக்கவன் (1). பக்தியோகத்திற்குத் தூண்டுபவன்; பரமபதம் அளிக்க வல்ல பிரபத்தியோகத்திற்கு ஏவுபவன்; அன்பு இல்லா தார்க்குப் பொய்யன்: திருவாழியைத் திருக்கையிலுடை யவன்; கடல் நிற வண்ணன்; எல்லாரிலும் மேம்பட்ட வன்; ஆலிலையில் பள்ளிகொண்ட ஆச்சரியன்; நேற்றைப் போதில் நுகரப்பெற்ற பொருளைப்போல் நெஞ்சை விட்டகலாத யோக்கியதையையுடையவன்; இன்று அதுப விக்கப்பெறும் பொருள் போன்றவன்; மேலுள்ள காலமும் இப்படியே அநுபவிக்க உரியவன்; திங்கள், ஆண்டு இவற். றிற்கு நிர்வாக்கன்; கன்னற்கட்டி போன்றவன்; கருப்பஞ்சாறு போன்றவன் (2).

வேறு புகலற்ற அடியேன் போல்வார் திறத்தில் காரணமில்லாமல் கருணை காட்டுபவன்; சிவனைத் தன் திருமேனியில் வைத்து அதனைத் தன் பேறாக உகந்திருக்