பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

இயற்கைக் காட்சிகள் : இயற்கை எழில் கொழிக் கும் இடங்களில் எல்லாம் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளான் என்ற உண்மையை நிலை நாட்டுவது போல் இந்த ஆழ்வார் பாசுரங்களில் இயற்கை எழில் சித்திரிக்கப் பெறுகின்றது. நறையூரை அடுத்துள்ள சோலையைப் பற்றி ஆழ்வார் நறவுஆர் பொழில் சோலை (7. 1; 1) நறை சேர் பொழில் (6. 4: 10) என்று கூறுவார். இந்தச் சோலையில் தேமாவின் செந் தளிர்களைக் குயில்கள் கொந்திக் கூவும் 16, 5 2). அவ் விடத்தின் நிலப்பண்பாலே மீன்கள் மிகவும் பருத்திருக் கும்; அவற்றைப் பிடிக்கின்ற உழவர்கள் இரண்டு கைகளாலும் அவற்றைத் தழுவுவர்; அவை மிக்க வலி வுள்ளவையாதலால், அவை பிடிப்பவர்களை உதறித் தள்ளி விட்டுப் போய்விடும்; அங்ங்னம் தள்ளப் பெற்று விழுந்த உழவர்கள் மீண்டும் அவற்றைப் பிடிக்க எழுந் திருப்பர்; இதைக் கண்ட ஆமை அஞ்சி வரம்பிலே நின்ற மஞ்சள் புதரிலே புகுந்து மறையும் (6. 6: 3); அவ்விடத் தில் எழில் மிக்க மயில்கள் நடனமாட, அதற்கேற்ப வண்டுகள் இசைபாடும் (6, 5 : 4).

அங்குள்ள மரத்தின் பொந்துகளில் வாழும் குஞ்சுகட் காக இரை தேடும் பறவைகள் நத்தைகளைத் திரட்டிக் கொண்டு செல்லும் (6, 5, 7); மீன்களை மிகுதியாகப் பிடித்துண்ணும் கொக்குகள் தம் பேடைகளுடன் ஒடிச் சென்று தாமரைப் பூவினுள் தேனைப் பருகா நிற்கும் (6. 5: 8); இன்னும் சோலையில் வண்டுகள்; அப்போத லர்ந்த செண்பக மலர்களின் நறுமணம் மிக்க தேனை யுண்டு மகிழம் பூவின்மீது தங்கியிருக்கும் (6, 6, 1) : அன்னப் பறவைகள் தம் பேடைகளோடு கூடி அங்குள்ள மகளிரின் நடையழகைக் கண்டு தாமும் அப்படியே நடக்க விரும்பும்; அந்த நடையழகு தமக்கு வாராமையால் வெள்.கி ஒதுங்கிப் போகும் (6. 5. 5); சில அன்னப் பறவை