பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

கள் அருளிச் செய்தது, அயக்ரிவ, கல்கி அவதாரங்கள், கஜேந்திரனுக்கு அருளியது ஆகியவற்றை அழகாக எடுத்துக்கூறிப் பேராசிரியர் ஆழங்கால் படுகின்றார்கள்.

நிறைவாக தத்துவக் கருத்துக்களை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்ற தலைப்பில், சித்து, அசித்து, ஈசுவரன் என்று தத்துவத் திரயத்தையும், சரீர-சரீரி பாவனை, இறைவனின் ஐந்து நிலைகள், பாகவத வைபவம், இதம்சித்தோபாயம், சாத்தியோபாயம், பிரபத்தி நெறி, புருஷகாரம் மற்றும் புருஷார்த்தம் ஆகியவைகளின் விளக்கங்களை ஆழ்வார் பாடல்களைக் கொண்டு நுட்ப மாகப் பொருள் சொல்லி அருமையாகத் தெளிவாக்கி யுள்ளார்கள் பேராசிரியர் அவர்கள். வைணவ சமய நெறியின் தத்துவப் பொருளை விளக்கும்போது, அர்த்த பஞ்சக விளக்கங்களையும் ஆங்காங்கு இரஹஸ்ய கிரந்த நூல்களின் துணைகொண்டு மிக அற்புதமாக எழுதி யுள்ளார்கள்.

ஆக, பேரரசிரியர் அவர்கள் தமது 77-வது வயதில், வயது முதுமையைப் பாராது அறிவு முதுமையையே பற்றாசாகக் கொண்டு, 555 பக்கங்களில் பரகாலன் பனுவல்களின் சாரத்தைப் பிழிந்து, வியக்கத்தக்க ஈடுபாட் டோடும், தோய்ந்த உள்ளத்தோடும் , தம்மையே மறந்து ஆழ்வாராகவே ஒன்றி விடுகின்றார். பாசுரங்களின் சொல் வளம், உரை ஆசிரியர்களோடு பேராசிரியரும் பாசுரப் பொருள்களை அநுபவவித்த பாங்கு, இறை அநுபவத்தில் ஆழ்வார் ஆழங்கால்பட்ட முறை ஆகியவைகளோடு இந் நூலைப் படிப்போரின் உள்ளங்களையும் இக்கட்டுரைகள் ஆழ்வாரின் பாசுரங்களைச் சேவித்து அநுபவிக்கத் தூண்டுகிறது. திருத்தலப் பயணக் கட்டுரைகளை படிக்கும் போது நாமும் ஆழ்வாரோடும் ஆசிரியரோடும் இத்திருத் தலங்களை எல்லாம் நேரில் சேவித்த பேற்றைப் பெற்று விட்டதான திவ்விய அநுபவத்தைப் பெறுகிறோம். பதரி வரை யாத்திரை சென்ற அடியேனுக்கே இந்த அநுபவம்