பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 37 E.

குதிரை வடிவாய் வந்த கேசியைத் தொலைத்தல், காண்ட வத்தைத் தீமூட்டல், கொக்கு உருவம் கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்து மாய்த்தல் போன்ற கண்ணனின் தீரச் செயல்களையெல்லாம் நினைந்து போற்றுவர். இங்ங்ணம் செயற்கரியனவற்றைச் செய்த பெருமானே நறையூர் நின்ற நம்பி.

இவற்றைத் தவிர, வியூகமூர்த்தியாக நின்று அருஞ் செயல் புரிந்தவற்றையும் அநுசந்திக்கின்றார், பாலனாகி ஏழுலகுண்டு ஆலிலைமேல் அறிதுயில் கொண்டவன்; 'ஆதிமூலமே!’ என்று கூவியழைத்த கஜேந்திரன் முன் தோன்றி அவன் சமர்ப்பித்த 1008 தாமரை மலரை ஏற்று முதலையைக் கொன்றொழித்தவன்; பாற்கடலைக் கடைந்து விண்ணவர் அமுதுண அளித்துப் பெண்ணமு தாம் பெரிய பிராட்டியைத் தான் கொண்டவன்; அன்ன மாய் வந்து அருமறைகளை ஒதுவித்து அவற்றைக் காத்தவன்.

நெஞ்சிற்கும் பிறர்க்கும் உபதேசம் : இந்த ஆழ் வார் நெஞ்சிற்கு இரண்டு பதிகங்களாலும் (6. 4, 6. 9), பிறருக்கு ஒரு பதிகத்தாலும் (6. 6) உபதேசம் செய்வதைக் காண்கின்றோம். திருநறையூர் நம்பி சந்நிதி மணிமாடக் கோயில்’ என்று வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. செம் பியன் கோச்செங்கனன் என்னும் ஒரரசன் நம்பிக்குத தொண்டு பூண்டு உய்ந்து போனான். 'நம்பி ஒருவாள் கொடுத்தருள அத்தைக் கொண்டு பூமியை யடையத் தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் என்றொரு பிரஸித்த, உண்டாய்த்து' என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம். எம்பெருமானின் திருவடிகளைப் பெற விருப்பமுடையவர்களை நோக்கித் திருநறையூர் மணி மாடம் சேருமாறு உலகிற்கு உபதேசிக்கின்றார் (6, 6).

13. திருநாங்கூர் மணிமாடக் கோயில் வேறு.