பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 373

அன்பனையன்றி ஆதரியேனே என்றும், "எந்தையை எந்தை தந்தை அம்மானை எம்பிரானை எத்தால் மறக் கேனே?’ என்றும், "தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது என்றும் சொல்லிச் சொல்லி களிப்பெய்துகின்றார். அடுத்து திருச்சேறை செல்லத் திரு வுள்ளம் கொள்ளுகின்றார்.

24. திருச்சேறை' : திருமங்கையாழ்வார் மட்டி லுமே இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். எம்பெருமானுக்கு அடிமைப்படுவதைக் காட்டிலும் அவ னுக்கு அடிமைகளான பாகவதர்கட்கு அடிமைப்படுதல் சிறந்தது என்பது வைணவதத்துவம். பகவத் பக்தியின்

14. திருச்சேறை: திருக்குடந்தை - திருவாரூர் நெடுஞ் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உள்ளது. (திருநறையூருக்குத் தென்திசையில் 3.கி மீ. தொலைவில் உள்ள்து). எம்பெருமான் : சாரநாதன்: நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகமண்டல்ம். தாயார் : சார் நாயகி (இத்திருக்கோயிலில் ஐந்து நாச்சியார்கள் உள்ளனர்).

இத்தலத்து எம்பெருமான்; சாரநாதன்; தாயார், சாரநாயகி; தீர்த்தம். சாரதீர்த்தம்; நிலம் சாரrேத்திரம்: ஐந்து சாரமுள்ளபொருள் கள் ஒருசேர் அமைந்திருத்தலால் இத்தல்ம் "திருச்சேறை" என்ற திருநாமம் பெற்றது. வட மொழியில் பஞ்ச ஸார rேத்திரம்' என்று வழங்குகின்றது, இங்ங்ணம் சாரமுள்ள பொருள் கன்னயுடைய இத்திருத்தலத்தில் காவிரி தவம் செய்து கங்கையைவிடச் சிறப்புப் பெற்ற்னள் என்பர். பெரி. திரு.7.4 (பதிகம்). 10.1;6; சிறி. திருமடல் (39), பெரி. திருமடல் (56) மேலும் விவரம் வேண்டுவோர் சோ.கா.தி. (1) கட்டுரை-13 காண்க.

.பா.க.-18