பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意罗盛 பதகாலன் பைந்தமிழ்

உறைப்பே பாகவதபக்தியில் வெளிப்படும். இத் திருத்தலம் பற்றிய திருமொழியில் ஆழ்வார் திருச்சேறையையும் அவ்விடத்து எம்பெருமானையும் பணிகின்ற பாகவதர் களே எனக்கு உத்தேச்யர்' என்று அருளிச் செய்கின்ற முகத்தால் அத்திருப்பதியினிடத்தும் அங்கு எழுந்தருளி யிருக்கும் பெருமானிடத்தும் தமக்குள்ள பக்திப்பெருக்கை வெளியிடுக்கின்றார் (7.4).

கண்சோர வெம்.குருதி வந்துஇழிய

வெம்தழல்போல் கூந்த லாளை மண்சோர முலைஉண்ட மாமதலாய்! வானவர்தம் கோவே! என்று விண்சேரும் இளம்திங்கள் அகடுஉறிஞ்சு

மணிமாடம் மல்கு செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார் கான்மின்-என் தலைமே லாரே (1)

|சொர-சுழலமிட்டுத் தளர: குருதி-இரத்தம்; இழிய-பெருக: தழல்-நெருப்பு: மாமதலாய்இளம்பிள்ளையே; அகடு-கீழ்வயிறு: உறிஞ்சுஅளாவுகின்ற, மல்கு-நிறைந்திருக்கப்பெற்ற: தாள் - திருவடிகள்; தலைமேலார்-தலைமேல் வீற்றிருப்பர்i. என்பது முதற் பாசுரம், 'பூதனைய முடித்த சிறு குழந்தாய் வானவர்தம் கோவே' என்று சொல்லி iனுடைய பரத்துவ செளலப்பியங்களைப் போற்றி உருகுகின்ற பாகவதர்கள் எவரோ அவர்களே என் தலை ல்ே வீற்றிருக்க உரியார்' என்கின்றார்.

இத்தலத்து எம்பெருமான்மீது திருவாய் மலர்ந் தருளிய பாசுரங்களில் ஆழ்வாரின் பக்திவெள்ளம்இாகவதர்களின் மீதுள்ள ஆதரம் - கரை புரண்டோடு கின்றது. பாசுரங்களில் எம்பெருமான் இராமாவதாரம்,