பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பரகாலன் பைந்தமிழ்

நின் திருவடிகளே எனக்குத் தஞ்சம்; நின்னையன்றி வேறொரு புகலையுடையேனல்லேன்; இது சத்தியம்; திருச்சேறை எம்பெருமானின் அடியார்களைச் சேவித்த மாத்திரத்தில் என்னுடைய கண்களும் நெஞ்சும் களிக் கின்ற படிவைக்கானுங்கள்' (6), திருவனந்தாழ்வான்மீது திருக்கண் வளர்ந்தருளும் பெருமானே! அஞ்சன மலை போன்ற குளிர்ந்த வடிவையுடைய மாயனே! என்று இசால்விக்கொண்டு திருச்சேறை எம்பெருமானின் திரு வடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய எல்லா உணர்வுகளையும் தன் வசமாக்கிக் கொண்ட அப்பெருமானுக்கு ஆட்பட்டவர் எவரோ அவர்கள் இறத்தில் என் அன்பு பெருகுகின்றது (7): விண்ணவரும் மண்ணவரும் ஈண்டித் தொழும்படியான திருவடிகளை யுடைய திருச்சேறை எம்பெருமானைக் கண்ணாரக் கண்டும் கையாரத் தொழுதும் பரவசப் படுகின்ற வைண வர்களை நெஞ்சார நினைத்த மாத்திரத்தில் எம பயத் திற்கும் உட்ப்டேன் (8); பாகவதர்களைச் சேவிக்கப் பெற்றதனால் தமக்குண்டான எல்லை கடந்த மகிழ்ச்சிப் பெருக்கைப் பேசி, வஞ்ச நெஞ்சனான எனக்கு இப்படிப் பட்ட மகிழ்ச்சியை அநுபவிக்கும்படியான பேறு எங்ங்னம் வாய்த்ததோ? தெரியவில்லையே (9) என்று வியப்பெய்து கின்றார் ஆழ்வார்.

இத்திருமொழியைச் சேவித்தால் பெறும் பயனையும் கூறுகின்றார் ஆழ்வார். திருச்சேறை எம்பெருமானைச் சேவிக்கச் செல்பவாகள் வேறு மலர்களைத் தேட வேண்டா; இத்திருமொழிப் பாசுரங்களை அநுசந்தித் தாலே பூவிட்டதற்கும் மேலாக எம்பெருமானின் திரு வுள்ளம் உகக்கும் என்கின்றார். அடுத்து திருக்குடந்தை குப் போகச் சித்தமாகின்றார்.