பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 279

என்பது திருக்குறுந்தொகைப் பாசுரம். பழுதே பலகாலும் போயின என்று அங்கலாய்க்கின்றார், திருவுக்கும் திருவாகிய அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றம் தன்னைச் சேவிக்கும் போதும், இந்த நகர் எம்பெருமானை ஆழ்வார் மனக்கண்முன் காட்சி தருகின்றார்.

பேரானை, குடந்தைப்

பெருமானை இலங்கொளிசேர் வாரார் வனமுளையாள்

மலர்மங்கை நாயகனை ஆரா இன்னமுதைத்

தென் அழுந்தை மன்னிநின்ற காரார் கருமுகிலைக்

கண்டு களித்தேனே (7.6:9) இலங்கு - விளங்குகின்ற; மலர்மங்கை - இலக் குமி, ஆரா - தெவிட்டாத அழுந்தை - திரு வழுந்துார்; முகில் - மேகம் (உருவகம்))

என்று எக்களிப்புடன் பாடுவதைக் காணலாம்.

எம்பெருமான் ஆசாரியனாக நின்று அவனிடம் திருமந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார்.

தூவிசேர் அன்னம் துணையொடு புணரும்

சூழ்புனல் குடந்தையே தொழுது என்

நாவினால் உய்ய நான்கண்டு கொண்டேன்

நாராய னாஎன்னும் நாமம் (1.1:2)

[தூவி - சிறகு; துணை - பெண் அன்னம்}

என்று பாடுகின்றார்; 'ஆரா அமுதப் பெருமானைத் திருக்குடந்தையில் சேவித்தேன்; தீய பொருள்களைப் பேசின வாயாலே திருமந்திரத்தை அநுசந்தித்து ஸ்வரூபம்