பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 2.85

னரின் பற்று இவற்றைக் கைவிட்டேன்; நின்திருவடிகட்கு அடிமை பூண்டேன்; அறமே வடிவெடுத்த தின்னை என் நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டேன் (2): நீயோ குறுங்குடியில் எளியனாயிருப்பவன்; திருநறையூர்த் தேனாக இனிப்பவன்; மான்போன்ற பார்வையையுடைய மாதர்களின் கண் அம்புக்கு அஞ்சி ஓடிவந்து நின்னைச் சரண் அடைந்தேன் (3); மாதர் இன்பத்தில் மதிகெட்டு மூழ்கினேன்; இதனால் வெந்நரகில் அழுந்தும் பலனைப் பெற்றேன்; நற்பேறாக உய்ந்து நின் திருவடிகளை அடைந்தேன் (4); நின்னையன்றி வேறொரு தெய்வத்தை நினைப்பவன் அல்லேன்; எல்லோரிலும் மேலாணவனான தின்னை என் நெஞ்சில் நிறுத்திக் கிடைத்தற்கரியன வற்றைப் பெற்றேன்; சம்சாரத்தில் பிறவாமையாகிய பேற்றினையும் பெற்றேன் (5); ஏழு கடல்கள், பூமி, சந்திரன், சூரியன், குல பர்வதங்கள் ஆகியவை யாவும் நீயே, சர்வசரீரியாகிய நின்னையன்றி வேறு தெய்வத்தை அறியேன் (6); தேவரீர் சாரமாக ஒன்று சொல்லியருள வேண்டும்; அதற்குமேல் அடியேன் வாய் திறக்க வாய்ப்பு இருக்கக் கூடாது (7); (அஃதாவது, ஆழ்வீர், உம்மைத் திருவடி சேர்த்துக் கொண்டேன்); தேவரீர் பக்கம் நெஞ்சைச் செலுத்தியிருக்கும் அடியேனுக்குப் பரமபதம் கிடைக்கும் நாள் எதுவோ அந்நாளை அருளிச் செய்தல் வேண்டும் (8); பிராட்டி இணை பிரியாதிருக்கும்போது அடியேனுக்கு என்ன குறை? கருமங்கள் நெருங்காமல் பாதுகாக்க வேண்டும்; அவை தீயினில் துரசாகும்படி’ அருளிச் செய்தல் வேண்டும் (9) என்று வேண்டு கின்றார்.

27. நந்திபுர விண்ணகரம் : இத்திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார் மட்டிலுமே ஒரு திருமொழியால் 3. கந்திபுர விண்ணகரம் : இத்திருதலம் கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கி. மீ. அடிக்கடிப் பேருந்து வசதி இல்ல்ை.