பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛怒密 பரகாலன் பைந்தமிழ்

மங்களாசாசனம் செய்துள்ளார். நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம் ஆகும். இத் திருப்பதியில் நத்திவர்மன் என்ற ஒர் அரசன் சில திருப்பணிகள் செய்தனனாக அறியக்கிடக்கின்றது. நந்தி தேவர்க்குக் காட்சிதந்த நகரமாதலால் பற்றி நந்திபுர விண்ணகரம் என்று திருநாமம் பெற்றதாகவும் உரைப்பர்.

இத் திருமொழியின் முதற்பாசுரம்,

தீது அறு நிலத்தொடு எரி காலினொடு

நீர்கெழு விசும்பும் அவையாய் மாசுஅறு மனத்தினொடு உறக்கமொடு

இறக்கை அவை ஆய பெருமான், தாம்செற உளைந்துதயிர் உண்டுகுடம்

ஆடுதட மார்வர் தகைசேர் நாதன் உறை கின்றநகர் நந்திபுர

விண்ணகரம் நண்ணு மனமே (1)

tதீது அறு-குற்றம் அற்ற; எரி-நெருப்பு; கால்காற்று: கெழு-சிறந்த விகம்பு-ஆகாயம்; இறக்கை-மரணம்; செற-சீற்றம் கொள்ள; உளைந்து-நடுங்கி; மார்பர்-மார்பை உடைய வர்; தகை-அருள்)

என்று நடைபெறுகின்றது. இப்பாசுரத்தின் நாதன் உறைகின்ற நகர்' என்ற தொடரால் இத்திருத்தலத்தின்

குதிரை வண்டி, மாட்டு வண்டி வசதியைக் கொண்டே இந்த ஊரை அடைத்ல் வேண்டும். இத்திருத்தலும் நாதன்கோயில் என்ற திருப் பெயராலும் வழங்கி வருகின்றது. எம்ப்ெரு மான்: விண்ணகரப் ப்ெகுழர்ன், சகந்நாதன் நாதப் பெருமாள்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்; இருந்த திருக்கோலம். தாய்ர் : சண்பகவல்லி. பெரி. திரு. 5. 10 (பதிகம்)