பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 295

கழனிகளில் உள்ள அழகிய நீலமலர்கள் வண்டுகள் கூட்டம் கூட்டமாக விருந்து உண்பதற்கு தேனைப் பெருக்குகின் தன (7), காவிரி நதி ஒளியுடன் திகழும் நவமணிகளையும், மூங்கில் முத்துகளையும் சாமரங்களையும் பொன்னையும் தள்ளி வருகின்றன.

ஊர்ச் சூழ்நிலை : சிறந்த வேலைப்பாடுகளமைத்த மதில்களாலும் மாளிகைகளாலும் அழகிய மண்டபங்களி னாலும் சிறந்து காணப் பெறுகின்றது ஊர் (4). நாவில் தான்மறைகளை ஒதும் அந்தணர்கள் வாழும் இடமாகும் இவ்வூர் (5). இவ்வூரில் வாழும் அந்தணர்கள் மறைகள்ை ஒதுவதுடன் முத்தினையும் வளர்ப்பவர்கள்; இதனால் பெரும் புகழையும் பெற்றவர்கள்; பொறுமையும் வள்ளண்மையும் இவர்தம் சிறந்த பண்புகளாகும் (8).

எம்பெருமான் : எம்பெருமானின் சிறப்பு இவ்வாறு பேசப் பெறுகின்றது: 'எவருக்கும் தம் முயற்சியால் அறியக் கூடாதவன்; எல்லாவுலகங்கட்கும் நாதன்; என்னை அடிமையாகக் கொண்டவன்; வாமன மாணி உருவங்கொண்டு மாவலியின் யாக பூமியில் அழகிய நடையுடன் சென்றவன் (1): வாமன உருவத்துடன் சென்று மாவலியை வஞ்சித்து எல்லா உலகங்களையும் சுவாதீனப் படுத்திக்கொண்டவன்; கஜேந்திரனின் துன்பம் தீர்த்த புனிதன் (2): இராவணன் முடியும்படி அம்புகளைப் பிரயோகித்தவன்; குதிரை வடிவத்துடன் வந்த கேசி என்னும் அசுரனின் வாயைக் கீண்டவன்; கம்சன் நிறுத்தி வைத்திருந்த சானூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை வென்றவன்; தவழ்ந்து சென்று இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன்(3); கோவர்த்தன மலையால் இந்திரனின் கல் மாரியைப் பழுதாக்கினவன்; இராவணனின் இருபது தோள்களையும் அறுத்தொழித்த வல்வில்லையுடைய இராமன் (4, 7), யசோதைப் பிராட்டி கண்படாதபடி மறைத்து வைத்திருந்த தயிரை