பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலியடக்கிய வீரன் (2). எல்லா வல்லமையையும் உடைய வன், தயிருண்ணப் பார்க்கின்றான்; தன் விருப்பம் இந்த இருப்பால் நிறைவேறாதென்று அதற்காகப் பிள்ளை வடிவு கொண்டு தயிரமுது செய்கின்றான்; இதனால் தன் நீர்மையைக் காட்டுகின்றான் (3) கண்டார் கண்ணைக் கவரும் மன்னு குறளுருவில் மாணியாய் - மாவலி தன் பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து மூவடி மண் இரந்து பெற்றவன் (A). அடியார்கள் துதிக்கும்படியாகத் தன்னுடைய கோலத் திருமேனி சூரிய மண்டலத்தையும் போய்த் தொடவளர்ந்து அண்டமெங்கும் பரவி நின்ற உத்தமன் (5). தக்கன் வேள்வியை அழித்த சங்கரன் சாபத்தைத் தீர்த்த பெருமான் (6). கடல்கள், மலைகள் முதலானவற்றோடு கூடிய உலகங்களை யெல்லாம் பிரள யம் கொள்ளாதபடித் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்தவன் (7), திருநீர் மலையில் எழுந்தருளியுள்ள பெருமானே இங்கும் எழுந்தருளியுள்ளான் (8)* ஆற்றுப் பெருக்குபோல பெருகா நின்றுள்ள காலைக் கொண்ட ஆழ்வாரின் இதயம் உருகும் படியாக உட்புகுந்த பெருமான் திருக்கூடலூரில் எழுந்தருளியிருப்பவன்.

தேவர்கள் கூட்டமாகக் கூடி இத்தலத்து எம்பெரு மானை வணங்கி வாழ்த்தியமையால் இத்திருத்தலம் கூடலூர் என்று திருநாமம் பெற்றதாகக் கூறுவர் பெரியோர்.

31. ஆதனுளர்' : இந்தத் திவ்விய தேசம் கும்ப கோணத்திற்டு அருகில் உள்ளது, திருமங்கையாழ்வார் மட்டிலும்,

14. திவ்விய தேசத்தில் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் யாவரும் ஒருவன்ே என்ற உண்மையைத் தெரிவித்தவாறு. 15. ஆதனுர் : சுவாமிமலை இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது. புள்ளம்