பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

惑夺盛 பரகாலன் பைந்தமிழ்

எம்பெருமான் வதைத்த தலமாதல்பற்றி இத்திருத்தலம் தஞ்சை என்று திருநாமம் பெற்றதாகக் கூறுவர். திருமங்கையாழ்வார்,

எம்பிரான், எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர்உயிர் செகுத்ததம் அண்ணல்; வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள்: உய்ய நான்கண்டு கொண்டேன்

நாராய னாஎன்னும் நாமம்’

(செகுத்த-அழித்த அண்ணல-பெருமை பொருந்

தியவன்; வம்பு-மணம்: உய்ய-கடைத்தேற)

என்ற பாசுரத்தில் முதலாவதான தஞ்சை மாமணிக் கோயிலைக் குறிப்பிடுவர். "எனக்கு உபகாரம் பண்ணின வனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லாவித உறவு முறையும், பகைவர்களை அழித்து என்னை ஆண்டவனும் என்னுடைய உயிருக்கு உயிரானவனும் அம்பு மாரியால் அகர்களைக் கிழங்கு எடுத்தவனுமான பெருமை பொருந்திய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற பரம போக்கியமான தஞ்சை மாமணிக் கோயிலைத் தொழுது எல்லாவித உறவினனும் அவனே என்பதன் பொருளுக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன்' என்கின்றார்.

இத்திருக் கோயிலை மங்களா சாசனம் செய்த செய்த இன்னொரு பாசுரமும் உண்டு.

2. பெரி. திரு. 1. 6