பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器盘等 பரகாலன் பைந்தமிழ்

கொண்டிருந்த இரணியனின் மார்பு இரு கூறாகும்படி தன் திருக்கை நகங்களாலே பிளந்த பெம்மான் (3); பாரதப் போரில் எதிரிகளான அரசர்களை மாளச்செய்து பஞ்ச பாண்டவர்கட்கு அரசினைப் பெற்றளித்தவன் (4); உடற் பண்பாலும், உயிர்ப்பண்பாலும் சிறந்தவளான பூமிப் பராட்டியார் பிரளயப் பெரு வெள்ளத்தில் புக்கு அழுந்தினபோது கோல வராகவடிவு கொண்டு அண்ட பித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியைத் தோண்டி எடுத்துத் தன் கோட்டிடைவைத்தருளின கோமான். (5); தேவர் கட்கு அமுதளிப்பான் வேண்டி ஆமையாகத் திருவ வதரித்த ஆதிமூலன் (6) இறைவணனின் பத்துத் தலை களும் அற்று விழும்படி கோலவில்லினை வளைத்து அம் பெய்த கோமகன் (7); முன் பொருகால் இவ்வுலகங்களெல் லாம் அறிவுகெட்டு அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்த பொழுது அன்னமாகி அருமறை பயந்த வள்ளல் (8); மாவலியின் வேள்வி பூமியில் வாமன மானியாக எழுந்தருளி அவனிடம் மூவடி மண் இரந்து பெற்று அப் பொழுதே அகலிடம் முழுவதையும் சுவாதீனப் படுத்திக் கொண்டான் (9). இங்ங்ணம் பெருமைகள் எல்லாம் ஒருங்கே கொண்ட அஞ்சன வண்ணன் திரு வெள்ளறை யில் கோயில் கொண்டுள்ளான். அந்தப் பெருமானை 'நிற்பணிந்தெழுவேன்; எனக்கு அருள் புரியே’ என்று வேண்டுகின்றார் ஆழ்வார்.

37. உறையூர்' உறையூரைக் கோழி' என்று குறிக்கும் சங்க இலக்கியம்’ இத்தலத்திற்கு எழுந்தருள் கின்றார் ஆழ்வார். திருத்தலத்தை,

12. உறையூர் : தற்சமயம் திருச்சியைச் சார்ந்த ஒரு பகுதி_ இதனை நாச்சியார் கோயில்' என்று வழங்கி வருகின்றனர் பொதுமக்கள், திருச்சி கோட்டை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தொலைவிலுள்ள்து.