பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3置盛 பரகாலன் பைந்தமிழ்

துள்ளது. இத்திருத்தலம் நீர் வளம் காவிரி யாற்றால் ஏற்பட்டதால் அந்நதிபற்றிக் குறிப்பு அதிகமாக வருகின்றது. பாசுரங்களில் வண்டு பாடும் வார்புனல் வந்திழியப்பெற்றது; நீர் மதுவோடு கூடிப் பெருகும் (5,4:3) நீரில் சந்தன மரங்களும் நவமணிகளும் யானை மருப்பும் அகிலும் வேயின் முத்தும் மணியும் அடித்துக் கொள்ளப்பெற்று வரும். இந்த நீரால் வளம் பெற்ற வயல்களால் சூழப்பெற்றது. இத்திருததலம்: வாழைத் தோப்புகளாலும் தென்னந் தோப்புகளாலும் சூழப் பெற்றது. நான் முகனும் அவனால் படைக்கப்பெற்ற அனைவரும் வந்து வணங்கும் இடம். விண்ணுள்ளாரும் மண்ணுலகோரும் வந்து வழிபடும் இடம். தேனும், தேனும் கலந்தாற்போலவும். பாலும் பாலும் கலந்தாற் போலவும் பரம ரசிகர்களான பாகவிதோத்தமர்கள் தெருங்கிப் பழகும் திருத்தலம்.

எம்பெருமான் : அரங்கத்துப் பள்ளியான் ஆழ்வார் பார்வையில்: இந்த எம்பெருமான் நான் முகனைப் படைத்தவன்; பிரளயகாலங்களில் உலகங்களைத் திரு வமுது செய்தவன் (5.4:1), ஆலந்தளிரில் கண்வளர்கின்ற மாயன். மணிமயமான கிரீடங்களை அணிந்து அரவணை யில் கிடப்பவன் (2). மாவலியிடம் மூவடி மன்னை இரந்து பெற்ற வாமன மூர்த்தி (3) கடும் போரில் இலங்கை பாழாகும்படி வளைத்த வில்லைத் திருக்கரத்தில் உடையவன் (A) தாயாகிய யசோதைப்பிராட்டி போல வந்து நஞ்சு தீட்டிய முலை கொடுத்த பூதனையின் உயிரை உண்ட கண்ணன் (6). இராவணனை வீர சுவர்க் கத்துக்கு அனுப்பிய சக்கரவர்த்தித் திருமகன்(5).

இன்னொரு பதிகத்தில் (5.6) தான் திருவரங்கத்தில் கண்ட எம்பெருமானை இனங்காட்டுகின்றார். நீண்ட கையையுடைய யானை போன்றவன்; கடலில் கண் வளர் கின்ற நீல மணி போன்றவன்; பசுமை நிறம் மிக்க மரகத