பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னரங்கத்துப் பெரிய பெருமாளை அதுபவித்த ஆழ்வார் (1) திருமாலிருஞ் சோலை மலைக்கு எழுத்தரு ளுகின்றார். இன்று இஃது அழகர் கோயில் என்று வழங்கி வருகின்றது. இந்தத் தலத்து எம்பெருமானை ஆழ் வார் பல திருப்பாசுரங்களால் மங்களாசாசனம் செய் கின்றார்.

தலச் சூழ்நிலை: இத்தலச் சோலை சூழ்நிலையை 'வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை' (பெரி. திரு. 2.7:7), தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை" (9.9:5), கினை வளர்சூழ் திருமாலிருஞ்சோலை' (9 9:2),

صمیماس مسی

1. திருமாலிருஞ்சோலை மலை: இந்தத் திவ்விய தேசம் மதுரைக்கு வடக்கே 12 கல் தொலை விலுள்ளது. பேருந்து வசதிகள் உண்டு. மூலவர்: பரமசாமி. அழகர், கல்லழகர், மாலலங்காரர் என்ற பெயர்க்ளும் உண்டு. நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம், உற்சவர் சுத்தத் தங்கத்தால் செய்யப் பெற்றவர். த யார்: கல்யாண் சுந்தரவல்லி காச்சியார். இவர் தனிக் கோயில் தயார். பெரி. திரு. 1.8:5; 2.7.7; 9.8 (பதிகம்); 9.9 (பதிகம்) 10.1:3; 11.7:9. திரு குறுந் 3; சிறி. திருமடல் (39); பெரி. திருமடல் (62). மேலும் விவரம் வேண்டுவோர் ப்ாண்டி காட்டுத் திருப்பதிகள் 6-வது கட்டுரை காண்க.