பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 & பரகாலன் பைந்தமிழ்

தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலை: (9.9. 5), சிலம்பு இயல் ஆறுஉடை திருமாலிருஞ்சோலை (9.9:4), திங்கள் மாமுகில் திருமாலிருஞ்சோலை: (9.9:4). தென் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை: (9 9:7) ‘பூம் பொழில் சூழ் திருமாலிருஞ் சோலை (9.9:8) என் றெல்லாம் ஆழ்வார் வருணித்திடுவர். இதே சூழ்நிலையை இன்றும் காணலாம்.

சோலையின் சூழ்நிலையை மேலும் ஆழ்வார் விவரிப்

பர். சோலை மரச்சாரலில் மூங்கில்கள் விண்டு விரிந்து வளர்ந்துள்ளன; நறுமணம் மிக்க குறிஞ்சி மலர்களிலுள்ள செவ்வித்தேனில் படிந்த வண்டுகள் இன்னொலியுடன் வட்டமிடுகின்றன (9 8:2) காலம் உணர்த்தும் சோதிடன் போன்று உரிய காலங்களில் பூக்கும் மேகமண்டலம் வரை ஓங்கி உயர்ந்த வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் அங்குச் சூழப்பெற்றுள்ளன (9.8:3,4). ஒன்றோடொன்று பிணங்கி நிற்கும் விண்ணளாவும் மூங்கில்களின் நுனி மலை யுச்சியிலுள்ள தேனடைகளின் வாயைக் கிழிப்பதனால் தேனீக்கள் நாற்புறமும் பறந்தோடுகின்றன; அதனால் தேனின் மணம் எம்மருங்கும் வீசுகின்றது (9.8:5). வரு மழை தவழும் மாலிருஞ்சோலையில் முகில்கள் ஆழ் கடலில் நீரை முகந்து கொண்டு விண்ணில் ஏறி இடி முழக் கம் செய்கின்றன; அவ்வொலியைக் கேட்கும் சிங்கங்கள் அது யானையின் பிளிறல் என்று கருதி எதிர் முழக்கம் செய்கின்றன (9.8:6); மதங்கொண்ட களிறுகளின் கவுள் களின் வழியே மதநீர் பெருகி வருகின்றது. அதனை வண் டுகள் பருகியும் அதனால் வற்றாது மேலும் பாய்ந்து சாரல்கள் தோறும் வெள்ளமிடுகின்றது (9 8:6). மலையி னின்று இழியும் அருவிகள் சந்தனக் கட்டைகளையும் இரத்தினக் கற்களையும் உருட்டிக்கொண்டு வருகின்றன (9.8:1). விண்ணளவும் ஓங்கி உயர்ந்துள்ள சோலைகளில் மானினங்கள் மலையின் நீலப் பாறை வழிகளில் புகுந்து எங்கும் மேய்ந்து கொண்டிருக்கும் (9.8:7). குறவர்கள் தம்