பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 器男翠

தவனும் பெரிய பிராட்டியாருக்குப் போக்கியனுமான எம். பெருமான் (4): கடலநிற வண்ணனும், நீலமணி நிறமுடை யவனும், நித்திய சூரிகட்குத் தலைவனும் நீண்ட மாலை யிடையே திருமுடியையுடையவனுமான எல்லாவற்றிலும் உயர்ந்தவனும், திரிவிக்கிரமாவதாரத்தில் பூமியை அளந்து கொண்டவனுமான எம்பெருமான் (5); தானே உலகக் காப்பாளன் என்று அகங்களித்திருந்த இலங்காதிபதி யான இராவணன் முடியும்படியாக அம்புமாரிபெய்தவ னும், தன்னை அடிமை கொண்டவனுமான எம்பெருமான் (6), வத்சாசுரனைக் கொண்டு கபித்தாசுரன்மீது வீசி யெறிந்து இருவரையும் முடித்தவனும், கல்மாரியினின்று ஆநிரையைக் காத்துத் திருவுள்ளம் உவந்தவனும், பூமிப் பிராட்டிக்குப் போக்கியனுமான எம்பெருமான் (7); குருந்தை முறித்துத் தள்ளினவனும், குவலாயபீடம் என் னும் யானையைச் சீறி முடித்தவனும், கேசி என்னும் குதி ரையைக் கொன்றவனும், தன்னை ஆட்கொண்டருளத் தன் நெஞ்சில் புகுந்தருளினவனும், நித்திய சூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் (8); வைணவர்களால் வணங்கப் பெற்றவனான எம்பெருமான் திருக்கோட்டி யூரிலுள்ளான் என்று சொல்லிச் சொல்லித் தன்னையே மறக்கின்றார்.

5. திருமெய்யம்: திருக்கோட்டியூரிலிருந்து திரு. மெய்யத்திற்கு வருகின்றார் ஆழ்வார்.

5. திருமெய்யம்: திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கில் 46 கல் தொலைவிலும் புதுக்கோட்டைக்குத் தெற்கில் மூன்று கல் தொலைவிலும் உள்ளது. இரு வரங்கத்திற்கு அடுத்தபடியாகச் சிறப்புடையது; ஆதிரங்கம்' என்றே வழங்கப் பெறுவது இன்ற வன்; சத்தியகிரிநாதன்; நின்ற திருக்கிேலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் தாயார்; உய்யவந்தாள் நாச்சியார், பெரி. 2 5:8, 3 6:9, 5.5:26.8:7; 8.2:3; 10.1:5; 11 7:5. திருகுறுந்.