பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.334 பரகாலன் பைந்தமிழ்

உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்

கச்சிபேர் மல்லை என்று மண்டியார் உய்யல் அல்லால்

மற்றையோர்க் குய்ய லாமோ?

என்று பல தலங்களுடன் இத்திருத்தலத்தை நினைவு கூர் கின்றார். 'திருமெய்யத்து இன்னமுதவெள்ளம் என்று எம்பெருமானைச் சொல்லி இன்புறுகின்றார். இந்த எம் பெருமானை ஆழ்வார் அநுபவிப்பது சொல்லுந் தரமன்று.

மையர் கடலும்

மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும்

காயாவும் போன்றிருண்ட மெய்யானை மெய்ய

மலையானைச் சங்கேந்தும் கையானைக் கைதொழாக்

கையல்ல கண்டோமே (11, 7:5)

1மை ஆர்-கறுத்த வரை-மலை; முகில்-மேகம்; கொய்ஆர்- பறிக்கும் நெருக்க விருப்பத்தைத் தரும் இருண்ட-க று த் த மெய்யான்-திரு மேனியையுடையவன்; - என்கின்றார்.

கட்டேறு நீள்சோலைக்

காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை, மெய்யம்

அமர்ந்த பெருமானை (6 8:7)

19:பெரி. திருமடல் (63). மேலும் விவரம் வேண்டு வோர் பா. கா. தி. (கட்டுரை-2) காண்க.