பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 327

தாமரைப்பொய்கைகளையும் உடைத்தானசோலைகளால் குழப்பட்டது திருப்புல்லாணி என்ற திவ்விய தேசம் என்கின்றார்; தாதுமல்கு தடஞ் சூழ்பொழில் (9. கே 3}, போது நாளும் கம்ழ்பொழில் சூழ்ந்த புல்லாணி' (9. :ே 3). செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லானி’ (9. 4: 6), பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி' (9. 4: 8), போதவரும் புன்னை சூழ் புல்லாணி (9. 4:9) என்பன பெருமான் திருவாக்குகளாகும். மேலும்,

கள்ளவி லும் மலர்க் காவியும் து.ாமடற் கைதையும்

புள்ளும் அள்ளற் பழனங்களும்

சூழ்ந்த புல்லானி (9. 3: 6)

!கள்-மது அவிழும்-ஒழுகும்; காவி.செங்கழு நீர்ப் பூ, துமடல் - வெளுத்த மடல் கைதை - தாழை, அள்ளல் சேறு, பழனம் - வயல்)

என்று அந்தத் தலத்தின் சூழலை நெய்தல் நிலக் கருப் பொருனைக் கொண்டே வருணித்திருக்கும் எழில் நலம் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். ஆயினும் இன்று அச்சூழ்நிலையைக் காண முடிகின்றதில்லை.

இறையதுபவம் : இங்கு ஆழ்வாரின் அநுபவம் நாயகி பாவனையில் நடைபெறுகின்றது. மகள் பாவனை யில் பேசுகின்றார் ஆழ்வார். கொடிய பாவத்தையுடையே னான நான் என்னை நையச் செய்து கொள்வதால் என்ன பயன்? நெஞ்சமே! வா நாம் திருப்புல்லாணியை வணங்குவோம்’ (9.3:1,2) பெருமானை மறக்க முடிய வில்லையே! நின்னைப் பிரியேன்” என்று சொல்லிப் போனவரிடம் சென்று வணங்குவோம் (3). தோழியிடம் பேசுவது: உயிர்த் தோழியே, பிறரொருவரும் அறியாத படி (தேனுண்ணும் வண்டு ஒன்றே சாட்சி) என் பக்கல்