பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பரகாலன் பைந்தமிழ்

கலவிக்கு வந்த எம்பெருமான் நமக்குச் சொன்னபடி செய்திலன். ஆதலால் வா, புல்லாணிக்குச் சென்று வருவோம்’ (4). மனத்திற்குச் சொல்லுவது : 'பாவியாகிய நான் நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு வேகும். மணம் மிக்க தாழம்பூக்களை நம் குழலில் சூட்டி இனி உன்னை விட்டுப் பிரிந்தால் உயிர் தடுமாறிப்போகும்’ என்னும் படியான சொற்களைக் கூறி நம்மைவிட்டுப் பிரிந்த பெரு மானைச் சந்தித்து வருவோம் வா, மனமே" (5); நெஞ்சுக் குச் சொல்லுவது : மனமே, அவனைச் சந்தித்து இங்கு இருப்பதால் என்ன பயன்? ஆகவே அவன் உறையுமிடத் திற்குச் சென்று வருவோம், வா' (6): மனத்திற்குச் சொல் வது: "மனமே, பகலும் இரவும் கண்ணுறங்காதிருப்ப தனால் என்ன பயன்? அவன் வாழும் இடம் சென்று வணங்கி வருவோம், வா' (7) நெஞ்சிற்குச் சொல்வது : "கலப்பையும் சக்கரமும் ஆகிய ஆயுதங்களைத் தரித்தவர் நம்மிடத்தில் அன்புடையவர்போல் காட்டிக்கொண்டு கபடத்துடன் சிறிதும் இரக்கமில்லாதவராக இருக்கின் றார். வா, அவரிடம் சென்று தொழுது வருவோம்’ (8). தோழியிடம் சொல்லுவது தோழியே, அவனே நமக்குப் புருஷார்த்தம்: நாம் நீராடி அவன் திருநாமங்களை ஒதி அவன் திருவடிகளை நாள்தோறும் தொழுவோம். ஒன் றும் தாரான் எனினும் தந்திடுவான். அவன் அப்படித் தாரோதொழியினும் அவன் பொருந்தி வாழும் திருப் புல்லாணிக்குச் சென்று வருவோம், வா’ (9) இப்படி நெஞ்சையும் தோழியையும் மாறி மாறி அழைக்கின்றார் ஆழ்வார்.

இந்த முயற்சி பயன்படவில்லை. கால் நடைதாராத படி தளர்ச்சி. ஆகவே கண்ணிற் கண்ட பறவைகளைத் தூதுவிடுதல், முன்புள்ளார் நோவுபட அவர்கட்கு எம் பெருமான் உதவின நிகழ்ச்சிகளைக் கூறுதல், உறவினர் களின் அறிவுரைகளைச் செவிமடுக்காத நிலைமை ஏற்படு தல் போன்றவைகளால் இறைவனை அநுபவிக்கின்றார்.