பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 32婷

"தோழி, திருப்புல்லாணியைச்சென்று தொழுவோம்என்று அவாவுற்றிருந்த தமக்கு துன்பப்படுவதே பலன் என்பதா யிற்றே! துன்பப்படுவதுதான் நமது தலைஎழுத்தோ! என்று வருந்திக் கூறுகின்றாள் பரகால நாயகி (9. 4: 1}. 'பொன்னங்கழியிலுள்ள பறவைகளே வாமன வடிவங் கொண்டு மாவலியிடம் மூவடி மண்ணை இரந்து பெற்று மூவுலகையும் அளந்து கொண்டவன் செயலில் மயங்கிய தால் என்மேனியெல்லாம் பொன்னாயிற்று. என் நிலை யினைப் புல்லாணி எம்பெருமானுக்குத் தெரிவியுங்கள்' (2). அதே பறவைகளிடம் தனது சிந்தை நோயைச் செப்பியருளுமாறு வேண்டுகின்றாள் (2) இரணிய னுடைய மார்பைப் பிளந்து பிரகலாதனுக்கு அருள் புரிந்த பெருமான், பக்தர்களிடம் இப்படியே வேற்றுமையின்றி உதவ வேண்டியிருக்க, என்னளவில் அது செய்யாமை தகுதியோ? (4): இலங்கை கலங்கியழியும்படி அம்பு கோத்த சக்கரவர்த்தித் திருமகன் பின்னே சென்று அவனு: டைய பொய்யுரைகளை நம்பித் தரித்திருக்கின்றேன்! (5): 'பகலவன் மறைந்தான்; சந்திரன் தோன்றித் தன்னுடைய கிரணங்களால் தகிக்கின்றான்; புல்லாணியைத் தொழுத தால் என் அழகும் கெட்டொழிந்தது; வளையல்களும் பறிபோயிற்று (6); மாடுகளின் கழுத்திலுள்ள மணி யோசை ஓயாமல் கேட்பதால், அது தீயைக் காட்டிலும் கொடுமை புரிகின்றது. கடலும் வெவ்விய நெருப்பையே வீசுகின்றதே (7): கசேந்திராழ்வானுக்கு அருள் புரிந்த எம்பெருமான் என் திறத்தில் தாமதிப்பது என்னே? இளமதியும் தகிக்கின்றானே! (8); நான் மறை வடிவின னும் வேள்வி வடிவினனும் மேலுலகங்களாகவும் சந்திர சூரியர்களாகவும் உலகங்களைக் காப்பவனாகவும் உள்ள எம்பெருமான் என் திறத்தில் அருள்புரியாதது என்னே!" (9). இவ்வாறு ஏக்கத்தாலேயே எம்பெருமானை அதுப விக்கின்றாள்.