பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXXV

பையும் பெற்றுத் திகழும் இவர் என் நூலுக்கு சிறப்புப் பாயிர மாலை வழங்கியது இந்நூல் பெற்ற பேறு; என் பேறுமாகும். இதற்கு என் நன்றி. பணியே பரமன் துதி” என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நோய் நொடி யின்றி நீடு வாழ்ந்து பல் புகழ் பெற வேண்டும் என்பது என் ஆசி வாழ்த்து.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் A. W. அரங்காச்சாரியரின் நட்பு கிடைத்தது தில்லை கோவிந்தராசரின் திருவருள் என்பது என் நம்பிக்கை. செளலப்பிய, செளசீல்ய வடிவமாகக் திகழும் பேராசிரியர் பொருளாதாரத் துறையில் உழைப்பினால் உயர்ந்த செம்மல்; திருச்சித்திர கூடத்தைச் சேர்ந்தவர். பொருளல்ல வரையும் பொருளாகச் செய்யும்; பொருள் அல்ல தில்லை பொருள்' என்ற வள்ளுவர் போற்றும் பொருளாதாரத் துறையில் பணியாற்றி வருகின்றார். அதனைத் தெய்வப் பணியாகக் கொண்டு அத்துறை பிரகாசிக்கும் பொருட்டுப் பல ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துப் புகழ் பெற்றவர். இந்தப் பணி தேகயாத்திரையின் பொருட்டுத் தில்லை கோவிந்தன் இட்டவழக்கு - உலகியலை ஒட்டி.

இதற்கு மேலாக இப்பெருமகனாரைத்-பிறவியிலேயே பூரீவைணவப் பிறவியுடையவரைத்-தில்லை கோவிந்தன் திருத்திப் பணிகொண்டு ஆன்மயாத்திரைக்கு ஆயத்தம் செய்து வருகின்றான் என்பது அடியேனின் கருத்து. ஆழ் வார் அருளிச் செயல்களிலும் ஆசாரிய வியாக்கியானங் களில் இரகசிய கிரந்தங்களிலும் ஆழங்கால் பட்டு அவற்றை இவர் மூச்சாகவும் பேச்சாகவும் அவன் அதுப விக்கச்செய்து விட்டான் என்று எனக்குப்படுகின்றது. இவர் மேற்கொண்டுள்ள பல்வேறு வைணவப் பணிகள் இக்கருத்தினை அரண் செய்வனவாக அமைகின்றன.