பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 33

என்ற திருந்தாண்டகப் பாசுரம் தாய்ப் பாசுரமாக நடை பெறுகின்றது. இதில் ஆழ்வாருக்கு நாயகி நிலை ஒரு புறமும், தாயின் நிலை மற்றொருபுறமுமாக நடக்கின்ற படியால் எம்பெருமானை அநுபவிப்பதில் விரைவு உண்டானமையும் நாம் பதறக் கூடாது' என்ற தீர்மான மும் உண்டாவதைக் காண முடிகின்றது."

8. திருக்குறுங்குடி' : திருத்தண்காலிலிருந்து திருக்குறுங்குடிக்கு வருகின்றார் ஆழ்வார். இதனை வாமன rேத்திரம் எனவும் வழங்குவதுண்டு.

தலச்சூழ்நிலை மலையையொட்டிய பகுதியாத வின் குறுங்குடி சோலைகள் சூழ்ந்த ஊராகக் காணப்படு கின்றது. மலையையொட்டிய பகுதியாதலின் இவ்வூர் தல்ல குளிர் சோலைகள் நிரம்பியுள்ளன. கொல்லை வளர் இளர் முல்லை புல்கும் குறுங்குடி (9. 5:6), கொங்கு அலர் தண்பனை சூழ்புறவின் குறுங்குடி (7) என்ற ஆழ்வார் வாக்குகளால் இவ்வூர்ச் சுற்றுப் புறச் சூழ் நிலையினை அறியலாம். மேலும் இந்த ஆழ்வாரின்,

16. இந்நூல் - இயல் -17இல் தாய்ப்பாசுரத்தின்

தத்துவம் விள்க்கப் பெற்றுள்ளது.

11. திருக்குறுங்குடி : வானமாமலையிலிருந்து மேல் திசையில் சுமார் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. திருநெல்வேலி - தென் காசி அகல இருப்பூர்திப் பாதையில் சேரன்மா தேவி நிலையத்திலிருந்து சுமார் 20 கி. மீ. தொலைவு. பேருந்து வசதி உண்டு. இறைவன் : ஒவனவரும்பி, மலைமேல் கம்பி, கின்ற நம்பி, இருந்த கம்பி, கிடந்த கம்பி, திருப்பாற்கடல் கம்பி, திருக்குடி கம்பி (7 நம்பிகள்). தாயார் : குறுங்குடி வல்லி நாச்சியார் பெரி. திரு. 1. 6: 8; 5, 6:2; 5. 3 3; 9.5; 9.6 (பதிகங்கள்) திருநெடுந். 4; பெரி. திருமடல் (55). மேலும் விவரம் வேண்டு வோர் பர். கா. தி. (கட்டுரை - 18) காண்க.