பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3@念 பரகாலன் பைந்தமிழ்

இரவும் பகலும் ஈன்தேன்

முரல வண்டெல்லாம் குரவின் பூவே தான்மண

நாறும் குறுங்குடி (9. 5: 4) (தேன் - வண்டுகள்: ஈன் - இனிமையான்) என்றும்,

இரவும் பகலும்

வரிவண் டிசைபாட குன்றின் முல்லை மன்றிடை

நாறும் குறுங்குடி (9. 6: 9) குன்று - மலை; மன்று - நிலம்)

என்ற பாசுரப் பகுதிகள் இவ்வூர் மலைச்சாரலை ஒட்டிய தென உணர்த்துகின்றன. குறுங்குடியின் குளிர்ந்த நீர்த் தடாகங்களில் செங்கால அன்னம் மணம் மிக்க தாமரைப் பூவில் தன்பேடையுடன் சேர்ந்து வாழும் என்றும் (2), மென்மையான சிவந்த கால்களையுடைய இனிய துணை யாகிய நாரைச்சேவலுக்கு உணவு தேடிக்கொண்டு கள்ளப் பார்வையையுடைய அதன் பேடை வயல்களில் மேயும் என்றும் (3) இந்த ஆழ்வார் பேசுகின்றார். இன்னும், கொக்கின் குஞ்சு தகுந்ததான ஒரு மரத்தின் தாழ்ந்த கிளை யில் ஏறி தாய்க்கொக்கின் வாயிலிருக்கும் வெள்ளிறா’ என்னும் சாதி மீனை உண்ணும் என்றும் (9. 6: 1), சிவந்த வாயினையுடைய கிளிகள் பெண்களைப் போல் இனிமையாகப் பேசும் என்றும் (9, 6:6) அந்தச் சூழ்நிலையில் கருப்பொருள்களின் செயல்கள் காட்டப் பெறுகின்றன. மற்றும்,

கொல்லை முல்லை மெல்லரும்

பீனும் குறுங்குடியே (9, 6: 7)

என்ற ஆழ்வாரின் வாக்கு,