பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

眾3強 பரகாலன் பைந்தமிழ்

பெரிய பிராட்டியாருடன் சேர்ந்துறையும் பெரு, மானை நினைத்தவுடன் பிராட்டியின் சந்நிதானமும் அவளுக்குத் தரிப்பைத் தருகின்றது. ஆழ்வார் தாமே நடந்து செல்லும்படியான நிலைமை ஏற்படுகின்றது. அங்குறையும் பெருமானுடைய சீலத்தை அநுசந்திக்கின் றார். சிவபெருமானுக்கு தன் உடலின் ஒரு கூறினைக் கொடுத்த சீலகுணம் நினைவிற்கு வருகின்றது. அதுகூல ரான வைணவர்களையும் கூட்டிக்கொண்டு தாமே திருக்குறுங்குடி சென்று அநுபவிக்கத் துணிகின்றார் ஆழ்வார். அந்த அநுபவம் அமைந்தது இத் திருமொழி: (9. 6).

நின்ற வினையும் துயரும்கெட மாமலரேந்தி

சென்றுபணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர் என்றும் இரவும் பகலம் வரிவண் டிசைபாட (காள்! குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே (9)

|தொண்டீர்-அடியார்களே, நின்றவினை-சஞ்சத. கருமம், துயர்-பிராரப்த கருமம்; குன்று-மலை; மன்று-வெளி நிலம்)

என்பது ஒரு பாசுரம். இத்திருமொழியில். 'தொண் டர்களே! உங்களுடைய எல்லாப் பாவங்களும் தீரும் படியாக நன்மலர்களைக் கொண்டு போய்த் திருக்குறுங் குடியைத் தொழுதேத்துங்கள்!' என்கிறார். இப்படிச் செல்லுகின்றது. இத்திருமொழி.

அடுத்து, மலைநாடு சென்று சில தலங்களை வழிபடத் திருவுள்ளம் பற்றுகின்றார்.