பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மலைநாட்டுத் திருத்தலப் பயணம்

திருக்குறுங்குடி நம்பியை மங்களாசாசனம் செய்து மனநிறைவு கொண்ட மங்கைமன்னன் மலை நாட்டை நோக்கிப் பயணமாகின்றார். முதலில் (1) திருப்புலியூரை (குட்ட நாட்டுத் திருப்புலியூர்) அடைகின்றார்.

1. திருப்புலியூர்: முதலில் குட்ட நாட்டுத் திருப் புவியூரை அடைகின்றார். இத்தலத்து எம்பெருமானைப்பதி கத்தாலோ பாசுரங்களாலோ மங்களாசாசசனம் செய்ய வில்லை. சிறிய திருமடலில்,

பேர் ஆலி, தண்கால்

நறையூர்.திருப்புலியூர் (39)

என்று பல தலங்களைக் கூறும் போக்கில் இத்திருத்தலத் தின் திருப்பெயரும் ஆழ்வார் திருவாயினின்றும் வெளிப் படுகிறது.

1. ப்புலியூர் திருச்செங்கனூர் இருப்பூர்தி நிலை ు 4கல் பேருந்து மூலம் சென்று இத் திருத்தல் த்ன்த அடைய்லர்ம், இறைவன் மாயப் பிரின்:நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய திரு. முக மண்டலம், தாயார்; பெர்ற்கொடி காச்சியார். சிறி. திரு மடல் (3 9)இத்திருத்தலுத்தைப் பற்றிய அதிகமான விவரங்கள் மலைநாட்டுத் திருப்பதிகள் (கட்டுரை 9) என்ற நூலில் காணலாம்.