பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33& பரகாலன் பைந்தமிழ்

களைத் தம் வசப்படுத்திக் கொள்ளத் தக்க தேனொழுதப் பேசும் இனிய சொற்களையுடையவர்கள் (4). ஆகவே நீ உய்யும் வழியைத் தேடுவாயானால், வல்லவாழ் செல் லுமா வல்லையாய் மருவு நெஞ்சே!” என்று நெஞ்சிற்குப் பணிக்கின்றார்.

அடுத்து, செல்வ நிலையாமையைப் பேசுகின்றார் ஆழ்வார். 'நெஞ்சமே, இவ்வுலகத்துச் செல்வம் நிலை நிற்பதன்று உயர்ந்த வெண் கொற்றக் குடையின்கீழ் மன்னர் மன்னனாய் வீற்றிருந்து யானைகள் சூழ வாழ்ந்த வர்களும் மாண்டனர் என்பதை நீ கண்டு, அல்லது கேட்டு அறிந்திருப்பாய் அன்றோ? ஆக இவ்வுலகச் செல் வம துயரை விளைவிப்பதன்றி மகிழ்ச்சி தருவதன்று என் பதை நீ எண்ணினாயாகில் திருவல்லவாழ் திருப்பதியில் பொருந்தப் பார்ப்பாயாக' (5) என்கின்றார். இன்னும் "இந்த உடலின் கீழ்மையையும் நீ அறிவாய் அன்றோ? "தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசை யும், வேண்டா நாற்றமிகும் உடல்' என்பதன்றோ இல் வுடலின் நிலை? இத்தகையதான உடலில் ஐம்பொறி களாகிய வன்குறும்பர் புகுந்து நின்று தமக்கு வேண்டிய றைக் காட்டும்படித் தொல்லை தருவதற்கு அஞ்சியா கிலும் திருவல்லவாழ் சென்று பொருந்துவாயாக' (6) என்று தெருட்டுகின்றார்.

"இந்த உலகிலுள்ள நோய்கள் யாவற்றின் இருப் பிடம் இவ்வுடல், இந்த உடலைப் பொய்' என்று உண ராமல் மெய் என்ற சொல்லாலும் வழங்கி வருகின்றனர்: மேலும், இவ்வுடலைத் தவிர ஆன்மா என்பதொன் றில்லை என்றும் பிதற்றுகின்றார். சில பேயர்கள். இந்த வினுரைகளின்மீது கருத்தைச் செலுத்தாது திருவல்லவாழ் சென்று உய்க' என்று நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார்.

4. திருவரங்கலம்.17