பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருளிச் செயல்கள்

திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தும், யாதொரு காரணமும் பற்றாமல் கிடைத்த திருமந்திர உபதேசத்தையும் அதற்கு உள்ளீடான சீமந் நாராயண னுடைய சொரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யும், அருள்மாரி என்னும்படியான பெரிய பிராட்டி பாரின் அருளினால் இவற்றையெல்லாம் கண்டு அதுப வித்து அதனால் உண்டான பெருங்களிப்பால் 1, பெரிய திருமொழி, 2. திருக்குறுந் தாண்டகம், 3. திருநெடுக் தாண் டகம், 4. திருவெழுக் கூற்றிருக்கை. 5. சிறிய திருமடல், 6. பெரிய திருமடல் என்கின்ற ஆறுபிரபந்தங்களை அரு ளிச் செய்தனர். நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி என்ற நான்கு பிரபந்தங்கட்கு இவை ஆறு அங்க மாக அமைந்துள்ளனவாகக் கொள்ளப்படும். இங்கு 'எண்கள் ஒற்றுமையேயன்றி பொருள் ஒற்றுமை இல்லை என்பதை நாம் உளங்கொள்ளல் வேண்டும்.

1. பெரிய திருமொழி: இதில் அடங்கிய பத்துகள் பதினொன்று; பத்துத் திருமொழிகள் கொண்டது ஒரு பத்து என்று வழங்கப்படுகின்றது. ஒரு திெெமாழி என் பது பத்துப் பாசுரங்களைக் கொண்டது. பத்தாம் பத்து ஏழாம் திருமொழியில் மட்டிலும் பதினான்கு பாசுரங்கள்