பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 343

உள்ளன. பதினோராம் பத்தில் மட்டிலும் எட்டுத் திரு மொழிகள் உள்ளன. ஆகவே, பெரிய திருமொழியில் உள்ள பாசுரங்களின் தொகை 1084 ஆகும்.

திவ்விய தேசங்களில் ஈடுபடும் தன்மை ஆழ்வார்கள் அனைவர்க்கு ஒக்குமேயாயினும் திருமங்கையாழ்வார்க்கு அது மிகச் சிறந்து விளங்கும். திவ்விய தேசங்களை அதுபவிப்பதற்கென்றே தோன்றியவர் இந்த ஆழ்வார். "மாயோனை வாள்வலியால் மந்திரங்கொண்ட மங்கையர் கோன்’ எம்பெருமானிடத்தில் மந்திரோபதேசம் பெற்ற பின்னர் அத்திருமந்திரத்தையும் அதன் அரிய பெரிய பொருள்களையும் தாம் காணப்பெற்ற பேற்றி னைப் பரமானந்தம் தோன்றப் பத்துப் பாசுரங்களாலே பேசி அநுபவித்து, அத்திருமந்திரம் விளைந்த திருப்பதியா கின்ற பதரிகாச்சிரமத்தை நாடிச் சென்று பாடி அங்கிருந்து வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு, சோழ நாடு, பாண்டிநாடு, மலை நாடுகளிலுள்ள திருப்பதிகள் பலவற்றையும் பாடிக் களிக்கின்றார். பெரிய திருமொழி என்னும் இத்தொகுதியினால் இவை யாவும் ஆழ்வாரின் அர்ச்சாவதார அநுபவங்களைக் காட்டுவனவாகும்.

இந்த அநுபவம் தவிர, இராமாவதாரத்தை இராட்சச பாவனையாலும், கிருட்டிணாவதாரத்தை யசோதைப் பிராட்டியின் பாவனையிலும் அநுபவிக்கின்றார்: மற்றை யவதாரங்களின் மேன்மையோடு கிருட்டிணவதாரத்தின் எளிமையைச் சேர்த்து அநுபவித்தல் போன்ற அநுபவங் ಹಣ நுவலும் திருமொழிகளும் உள்ளன. தவிர, தாய்ப் பாrரமாகவும், மகள் பாசுரமாகவும் அநுபவித்த திருமொழிகளும் உள்ளன. விபவாவதார மகிமையும் விபவாவதாரங்களில் எப்பெருமானுடைய செளலப்பிய மும் பரத்துவமும் எதிரெதிராகக் கூறும் இரண்டு திோழியர் அநுபவமும் திருமொழிகளாக அமைந்துள்ளன.