பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பரகாலன் பைந்தமிழ்

இறுதித் திருமொழி உடல் உறவை அறுத்துத் தந்தருளு மாறு வேண்டும் பிரார்த்தனையாக முடிகின்றது.

2. திருக்குறுந்தாண்டகம் : தாண்டகம் என்பது தமிழில் ஒருவகைப் பிரபந்தம். இஃது அறுசீர் கொண்ட அளவொத்த அடிகள் நான்கினாலாவது, எண்இர் கொண்ட அளவொத்த அடிகள் நான்கினாலாவது தாம் வழிபடும் தேவதையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தமாகும். 'அறுசீர் கொண்டது குறுந்தாண்டகம்; எண்சீர் கொண்டது நெடுந்தாண்டகம். முன்னதில் அடிதோறும் மெய்யெழுத் தும் உட்படப் பதினைந்து எழுத்துக் குறையாமலும் இருபத்தாறு எழுத்துக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்; பின்னதில் அடிதோறும் இருபத்தாறு எழுத் துக்கு மேற்பட்டே இருத்தல் வேண்டும். இவற்றின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்களில் காணலாம்.

பசி மிகுதியாகும்வரையில் சோறிடத் தாமதம் செய்யும் தாயைப்போலவே, எம்பெருமானும் தன்னை அநுபவிப்பதற்கு உறுப்பான பெருவிடாய் பிறப்பிப்பதற். காக முகங்காட் டாதொழிய, அவனை விட்டுக் தரித்தற்கொண்ணாமல் பெருவிடாய்ப் பட்டவர்கள் நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது, நீரை வாரி இறைத்துக் கொள்வது முதலான செயல்களை மேற் கொள்ளுமாப்போலே, எம்பெருமானை வாபோலே பேசியும், தலையாலே வணங்கியும், நெஞ்சாலே நினைத் தும் தரிக்கப் பார்க்கின்றார் திருக்குறுந் தாண்டகத்தில்.

சான்றுகளாக ஒன்றிரண்டு பாசுரங்கள்: நிதியினைப் பவளத் துணை

நெறிமையால் நிறைய வல்லார்

கதியினைக் கஞ்சன் மாளக்

கண்டுமுன் அண்டம் ஆளும்