பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 7

வர்த்தமாகிறது' என்ற வியாக்கியான சூக்தி அறியத் தக்கது. ஆழ்வார் தாம் சனகராசன் திருமகளான நிலை மையிலேயே நின்று பேசுகின்றார்.

4. திரு எழுக்கூற்றிருக்கை: சித்திரகவி வகைகளுள் "இரத பந்தம் அமைப்பில் அமைந்துள்ளது இது. இரத பந்தமாவது தேரின் உருவத்தோன்றக் கட்டங்கள் போட்டு அவற்றில் எண் முறையே பாசுரப் பகுதிகளை அடக்க வேண்டும். தேருக்கு மேற்பகுதி என்றும், கீழ்ப் பகுதி என்னும் இரண்டு பகுதிகளாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு படியிலும் ஏழு கூறுகள் உண்டாகும்படிக் கீறவேண்டும். அப்படிக் கீறும்போது முதற்கூறு மூன்று அறையும், இரண்டாம் கூறு ஐந்து அறையும், மூன்றாம் கூறு ஏழு அறையும், நான்காம் கூது ஒன்பது அறையும், ஐந்தாம் கூறு பதினோரறையும், ஆறாம் கூறு பதிமூன்றரையும், ஏழாம் கூறு அங்ங்ணமே யாக, இப்படி ஒன்றற்கொன்று இரண்டறை மேற்பட்ட முறையே கீறவேண்டும். மேற்பகுதியில் தலையிலிருந்தும், கீழ்ப்பாகத்தில் அடியிலிருந்தும் இந்த முறை கொள்ளத் தக்கது வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களில் இதன் இலக்கணத்தைக் கண்டு தெளியலாம்.

ஆழ்வார்களுள் திருமங்கை மன்னன் ஒருவர்தாம் இல் வகையான சித்திர கவி அருளியுள்ளார். இதைத் தவிர, திருக்குருகைப் பெருமாள் கவிராயர் செய்துள்ள மாறன் அலங்காரம்' என்ற சிறந்த நூலில் சொல்லணியியலில் நம் மாழ்வார் விஷயமாக ஒரு எழுகூற்றிருக்கை பாடியுள் ளார். ஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள தேவாரப் பதிகங்களுள்ளும் (முதல் திருமுறையில்) ஒரு எழுகூற்றி ருக்கை உண்டு. எழு கூற்றிருக்கையாகிய இப் பிரபந்தம் ஆசிரியப் பாவகையில் நிலைமண்டில ஆசிரியப்பாவாக

1. சம்பந்தர். 1.128 கழுமலம் பற்றியது.