பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பரகாலன் பைந்தமிழ்

அமைந்துள்ளது. இது திருக்குடந்தை ஆராஅமுதனை ஆர்த்தியோடு சரணாகதி செய்வதாக அமைந்த, பிரபந்தம்’.

5. சிறிய திருமடல்: இது மடலேறுதல்' என்னும் துறையில் அமைந்தது. இஃது ஆழ்வார் தாமான தன்மை யிலிருந்து பேசும் பிரபந்தம் அன்று. கிருட்டினா வதாரத்தில் குடக் கூத்தில் அகப்பட்டு அன்னவனை அது பவிக்கப் பெறாது வருந்தி மடலெடுக்கத் துணிந்த ஒரு பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக்கொண்டு அவளு. டைய பாசுரத்தாலே தமது நிலைமையை வெளியிடும் பிர பந்தம் இது. இஃது அவதாரங்களில் உண்டான நீர் மையை அழிக்கின்றேன்’ என்று கூறுவதாக அமைந்தது. இப்பிரபந்தம் கலிவெண்பாவால் அமைந்தது.

6. பெரிய திருமடல்: இதுவும் மடலூர்தல் என்ற துறையில் அமைந்த நீண்ட பிரபந்தம். இதில் நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களில் நின்ற நிர்மையையும் அழிக்கின்றேன்" என்கின்றார். இதுவும் நாயகி சமாதி யில் தடைபெறுவது: கலிவெண்பாவால் ஆனது.

மடல்பற்றிய கருத்து : மடல்பற்றிய ஆழ்வாரின் கருத்தைக் காட்டுதல் பொருத்தமாகும். மடலேறுதல்’ அகப்பொருள் துறைகளுள் ஒன்று என்பதை நாம் அறிவோம். காமம் காழ்க்கொள்ளும் காலத்தில் ஆடவன் தன் மார்பீல் எலும்பு மாலையும் தலையில் எருக்கமாலை யும் கொண்டு பனங்கருங்காற் செய்யபெற்ற குதிரை மேல் ஏறித் தெருவில் வருவது மடலூர்தல் அல்லது மடலேறுதல் ஆகும். ஆடவன் மகளிரைக் குறித்து. மடலேறலாமேயன்றி பெண் ஆடவனைக் குறித்து

2. சாரங்கப்பாணிப் பெருமாள் கோயிலின் அமைப் பும் இரத அமைந்திருப்பதை இன்றுங் காணலாம்.