பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 器盛姆

மடலூரல் ஆகாது என்பது தமிழ் நெறியில் விதிக்கப் பெற்ற ஒரு வரம்பாகும்.

எத்தினை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை தெறிமை இன்னமை யான”

என்பது தொல்காப்பியம். திருவள்ளுவரும்,

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் { }

என்று இந்நெறியை வலியுறுத்துவதைக் காணலாம்.

திருமங்கையாழ்வார் பிராட்டிதசையை அடைத்து பரகால நாயகி ஆனபின்னர் மடலூரப் புகுதல் பொருத் துமோ? என்ற வினா எழுகின்றது. இந்த ஆழ்வார் அருளியுள்ள சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரு பிரபந்தகளிலும் ஆழ்வார் நாயகி மடலேறத்துணிவதாகக் கூறப்பெறுகின்றது. இதனைத் தமிழ் மரபினை மீறிய ஒரு புரட்சி என்று கருதலாமா? என்பது வினா. இரண்டு திருமடல்களிலும் ஆழ்வார் நாயகி மடலூர்வன், மடலூர் வன்’ என்றுசொல்லி அச்சமுறுத்தினாரேயன்றி அச்செயலை முற்ற முடிய நடத்தினதாகக் கூறவில்லை. சிறிய திருமடலில்,

ஒர் ஆனைக் கொம்பொசித்து

ஒர்ஆனைக் கோள்விடுத்து

சீரானை செங்கண்

நெடியானை தேன்துழாய்த்

தாரானைத் தாமரைபோல்

கண்ணானை எண்ணருஞ்சேர்

3. தொல். பொருள் அகத்தினை-38 (இளம்)