பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 35 Í

எனவே, ஆழ்வார்கள் தமிழ் நெறியினை அறியாது கூறினார் என்று சொல்வதற்கில்லை. ஆகவே, அவர்கள் கூற்றினைப் புரட்சிப் போக்கு என்று சொல்லுவதும் ஒவ்வாது.

ஆழ்வார்தாமும் தாம் தமிழ்நெறியினை அறிந்திருப் பதாகவும், வடநெறியினைப் பின்பற்றியே இத்துணி வினை மேற்கொண்டதாகவும் கூறுவர்.

"மான் நோக்கின் அன்ன நடையார்

அலரோ ஆடவர்மேல் மன்னும் மடலூரார்

என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்ட றிவ

துண்டு அதனை யாம்தெளியோம் மன்னும் வடநெறியே

வேண்டினோம்.8

என்ற பெரிய திருமடல் பகுதியால் அறியலாம். மடலேறு தல் என்பது ஆசை மிகுதியால் மேற்கொள்ளும் ஒரு செயல், ஆசையை வரம்பிட்டுச் காக்க யாராலும் இயலாது. அரசாணைக்கும் அது கட்டுப்படுமோ? வேலி யடைததால் நிற்குமோ வேட்கை அளவு கடந்த வேட்கை யின் காரணமாகி விளையக் கடவதான மடலூருதலை ஆண்கள்தாம் மேற்கொள்ளலாம், பெண்கள் மேற் கொள்ளலாகாது என்று வரம்பு கட்டுவது காதலின் இயல்பை அறியாதவர்களின் (உளவியல் உண்மையை உணராதவர்களின்) செயலாகும் என்பது ஆழ்வாருடைய திருவுள் ளம்' என்று கொண்டால் ஆழ்வார் புரட்சியான போக்குடையவர் என்று கருதலாம்.

8. பெரிய திருமடல்