பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. அகப்பொருள் தத்துவம்

எம்பெருமானை அநுபவித்தல் பலவகைப் பட்டிருக் கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் சொல்லிய நுபவித்தல், வடி ந்ெகை வருணிந்து அநுபவித்தல் அஆன் உகந்தருளின திவ்வியதேசங்களின் வளங்களைப் பேசிய நுபவித்தல், அங்கே அநுபவமுள்ள பூரீ வைணவர்களின் பெருமையைப் பேசி அநுபவித்தல் என்று பலவகைப் பட்டிருக்கும் பகவத துபவம். இவற்றுள் மிக அருமையான அற்புதமான மற்றொரு வகையும் உண்டு. அதாவது ஆழ்வார்கள் தாமானதன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன் மையை ஏறிட்டுக் கொண்டு வேற்றுவாயாலே பேசி அது பவித்தல். இப்படி அநுபவிக்கும் முறைகளில் பாசுரங்கள் (வெளிப்படும் போது தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் ஆாகரம் என்று, மூன்று வகைப்பட்டிருக்கும். அப்பொழுது ஆழ்வாருக்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி பரகால நாயகி என்ற பெண்மைப் பெயர் வழங்கப்படும். தாய் சொல்வது போலவும், மகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளிப்பட்டாலும், பாசுரம் பேசுகின்றவர் ஆழ்வாரேயாவர். இது பதிகங்கள்தோறும் வ்ரும் பலசுருதிப் பாசுரங்களால் (திருக்கடைக் காப்புச் செய் யுட்களால்) தெளிவாகும். திருவிடஇவந்தை எம்பெருமான் மீது தாய்ப் பாசுரமாக அருளிய திருப்பதிகத்தில் (பெரி. திரு. மன்னுமாமாட மங்கையர் தலைவன் மான

1. ஆ. சா. ஹிரு-133 (புருடோத்தம நாயுடு பதிப்பு)