பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 器态蕊

வேல் கலியன் வாய்ஒலிகன்’ என்றும்; திருதாகை அழகி யார்மீது மகள் பாசுரமாக அருளிய திருப்பதிகத்தில் (பெரி.திரு 9.2) கன்னி தல்மாமதிள் மங்கையர் வேந்தன் காமரு சீர்க்கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை என்றும் ஆழ்வார் பாசுரமாகவே தலைகட்டும். ஏனைய இடங்களிலும் இத்தகைய போக்கு அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகி வேறுவேறு பெயர்கனைப் பெற்றாலும் அவற்றில் பாய்ந்து செல்லும் நீர் ஒரே ஆற்து நீராகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ஙனமே ஆழ்வாரது சொல் மூன்று திலைகrாக வழிந்து புறப்பட்டாலும், அவை ஆழ்வாரது பாசுரங் களாகவே தலைக்கட்டும்.

ஆழ்வார்கன் தாமான தன்மையை விட்டுப் பெண் பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் எற்றுக்கு? என்ற வினா எழுகின்றது. ஆழ்வார்கன் பெண் தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகின்றனரல்லர். இந்த நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வந்து சேருகின்றது. புரு புருடோத்தமனாகிய எம்பெருமானின் பேராண்மைக்கு முன் உலகம் அடங்கப் பெண்தன்மையாக இருத்தலாலும், சீவான்மாவுக்கு சுவாதந்திரிய நாற்றமேயின்றிப் பாரதந்திரியமே வடிவாயிருப்பதாலும் இவ்வகைகளுக் கேற்பப் பெண் பாவனை வந்தேறியன்றே என்று கொள் ளுதல் வேண்டும். எனவே, ஆழ்வார்கள் குறிப்பாக திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் பெண் தன்மை எய்திப் பல திருக்கோயில் எம்பெருமான்களைப் பக்திப் பரவசத்தால் பாடி அநுபவித்ததை அவரவர்களுடைய திருப் பாசுரங்களில் கண்டு மகிழலாம்.

வைணவர்களிடையே நிலவும் இன்னோரு மரபும் உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது

山。品fr一盛S