பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器蚤噬 பரகாலன் பைந்தமிழ்

பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆய மங்கையர்களாகிக் கண்ணனைச் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனால், ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்தமனை அநுப. விக்கக் காதலிக்கின்றனர். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடத்தில் சில சமயம் ஞானம் தலை தூக்கி நிற்கும்; சில சமயம் பிரேமம் (காதல்) மீதுார்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலையிலிருக்கும்பொழுதும் அவர்கள் பாசுரம் அருளியுள்ளனர். இதனை,

ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண்பேச்சு’

என்று குறிப்பிடுவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது ஞானநிலையிலிருக்கும் பொழுது. அவர்கள் தாமான நிலையிலிருந்து பேசுவர். பிரேமநிலை யிலிருக்கும்பொழுது பெண் தன்மையை அடைந்து வேற்றுவாயாலே பெண் பேச்சாகப் பேசுவர்.

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண்பாவனை யில் பேசியனவாக அமைந்துள்ளன; இவற்றுள் தோழி பாவனையில் உள்ளவை 3 பதிகங்கள்; தாய் பாவனையில் இருப்பவை 7 பதிகங்கள்; மகள் பாவனையில் திகழ்பவை: 17 பதிகங்கள். இவற்றை நாம் அறிவோம். பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள் 23; திருநெடுந்தாண்டகத் தில் உள்ளவை 2 பதிகங்கள்: மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள் இவற்றுள்ளும் தாய்பாவனையில் உள்ளவை 12 பதிகங்கள்; மகள் பாவனையில் அமைந்: தவை 15. தோழிபாவனையில் ஒன்று கூட இல்லை.

2. ஆசா. ஹிரு.118 (புருடோத்தமநாயுடு பதிப்பு).