பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பரகாலன் பைந்தமிழ்

པ་ལས་ས༠༥༠༠༨,

விஷயா நுபவத்திற்கும் பரபக்தி' பாஞானம்' பரமபக்திம என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்களில் கூறப் பெறுகின்றன என்பதாகச் சமயச் சான்றோர்கள் கொள்வர்.

காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் சுவையின் அடிப்படையிலேயே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ங்ணமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள் அருளிச் செய்யப்பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் நலத்திற்குக் காரணமான வேப்பிலை உருண்டையை உட்கொள்ள வேண்டியவர் கட்கு வெல்லத்தை வெளியிற்பூசிக் கொடுத்து உண்பிப்பது போலவும், கொய்னா மாத்திரைகட்குச் சருக்கரைப் பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை திலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய சுாமத்திற்குக் காட்டப் பெறும் உத்தி முறையாக இறையனார் களவியலிலும் கூறப் பெற்

10. பரபக்தி - எம்பெருமானை நேரில் காணவேண்டும்

என்ற ஆவல். 11. பரஞானம் - எம்பெருமானை நேரில் காணல். 12. பரமபக்தி - எம்பெருமானை மேன்மேலும் இடை

யறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல். அன்றியும், எம்பெருமானோடு கூடினபோது சுகிக்கும்படியாகவும் பிரிந்தபோது ಫ್ಲಿ படியாகவும் இருப்பது பரபக்தி, பகவானுட்ையி, முழுமையான நேர்க்_காட்சி பரஞானம்; அவனு டைய அநுபவம் பெறாவிடில் நீரைவிட்டுப் பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்ப்டி இருத்தல் பரமபக்தி. இவ்வாறு நம் பண்டைய ஆசாரியர்கள் நிலைப்படுத்துவர்.