பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 岛姆器

தோழி, கடல் எப்போதும் காதடைக்கும்படி கத்து கின்றதே! அன்றிற் பறவையும் கண் மூடாமல் கதறு கின்றதே! எல்லோாக்கும் குளிர் வீசுகின்ற தென்றலும் எனக்கு நெருப்பைக் காட்டிலும் சூடாக வீசுகின்றதே!’ என்கின்றாளாம். காதல் நோயால் தாக்கப்பெற்றவர்கட்கு கடலோசை அந்நோயை மிகுவிப்பதாகும். எப்பொழு தும் இணை பிரியாமல் நிற்கும் அன்றில் கணப்பொழுது ஒன்றைவிட்டு ஒன்று பிரித்தாலும் அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் இறந்து படும். பிரிவைப் பொறாமல் கத்தும் அவற்றின் சிறுகுரல் காமநோய்ப் பட்டாரின் துயரை வளர்த்து மிகவும் வருத்தும்.

துணை மூலை அரக்கும் : அரக்குதல் இடத்தை விட்டுப் பெயர்த்தல்.

கொள்ளும் பயன்ஒன்று இல்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்

எறிந்துஎன் அழலைத் தீர்வேனே

நாச்.திரு 13:8

என்று ஆண்டாள் அருளிச் செய்ததுபோல இப்பரகால நாயகியும் செய்யப்பார்க்கின்றாள்.

இப்பாசுரத்தில், ஆழ்வார் நாயகி எம்பிரானே! உன்னை விட்டுப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் போக்க முடியவில்லை; இவ்விருள் தருமா ஞாலத்திலே என்னை வைத்திட்டு ஞானஒளி மழுங்கச் செய்கின்றாய்; ஞானம் என்னும் நிறை விளக்கு அணைந்து போயுள்ளது; சம்சார சாகரம் கொந்தளிக்கின்றது; இவ்வுலகத்துப் பொருள்களெல்லாம் எனக்குப் பாதகமாயுள்ளன; உன்னிடத்தில் நான் பக்தியை வைத்ததனாலன்றோ இப் பாடுபட நேர்கின்றது; அந்தப் பக்தியைக் கழற்றி