பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 3等辱

வெள்ளிவளைக் கைப்பற்ற

பெற்றதாயரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி

அணியாலி புகுவார்கொலோ? (1) fகள்வன் - திருடன்; கரியான் கருநிறத்தவன்; காளை - இளையான், வள்ளி - வள்ளிக் கொடி, மருங்குல்-இடை, அகன்று-நீங்கி, கழனி-வயல்; இஃது உடன் போக்கு என்ற துறையில் அமைந்தது. தலைவன் தலைவியைத் தோழியின் துணையால் தலைவி யின் இல்லத்தினின்றும் பெயர்ந்து ஒருவருக்கும் தெரியா மல் நள்ளிரவில் தன் மனையிடத்துக்கு உடன் கூட்டிக் கொண்டு செல்லுதலை உடன் போக்கு என்று வழங்கு வர் அகப் பொருள் நூலார்.

பரகால நாயகி திருத்தாயாருடன் கண் உறங்கிக் கொண்டிருந்தபொழுது யாரும் அறியாமல் அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போகத் துணிந்த வயலாளி மணவாளன் திருத் தாயார் சிறிது கண்ணயர்ந்த பொழுது அங்ஙனமே அவளைக் கொண்டு சென்று விட்டான். உடனே துணுக்கென்று கண்விழித்துக் கொண்ட திருத்தாயார் படுக்கையைத் தடவிப் பார்க் கின்றாள்; மகளைக் காண்கின்றிலள். தலைமகன் வயலாளி மணவாளனைக் குறித்து வாய் வெருவின படியை அறிந்தவளாதலின் அப் பெருமானே இவளைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று நினைத்து எழுந்து பார்க்கின்றாள். தான் நினைத்த படியே வயலாளி மணவாளன் தன் மகள் கையைப் பிடித்துக் கொண்டு செல்வதைத் தன் கண்ணாலே கண்டு வாய்விட்டுப் பேசுவ தாக நடக்கின்றது இத்திருமொழி. வயலாளி மண வாளனை நாளும் அநுபவிக்க வேண்டுமென்றிருந்த ஆழ்வாருடைய விருப்பம் இத் திருமொழியாகப் பரிண மித்து விட்டது போலும்.